Back to Top

நீரில் மூழ்கிய வணக்கஸ்தலங்கள் வரட்சியால் மீண்டும் தோன்றின! (படங்கள்)

நீரில் மூழ்கிய வணக்கஸ்தலங்கள் வரட்சியால் மீண்டும் தோன்றின! (படங்கள்)

February 27, 2018  10:07 am

Bookmark and Share
கொத்தமலை நீர்தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் இப்போது தென்பட ஆரம்பித்துள்ளன.

அண்மைகாலமாக மலையகத்தில் வரட்சியான காலநிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

1979 ம் ஆண்டு கொத்மலை அணைக்கட்டு நீர்மாணிக்கப்பட்ட போது பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க விகாரை மற்றும் ஆலயம் என்பன நீரில் மூழ்கியன.

தற்போது நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்படுவதுடன் அதனை பார்வையிட பொது மக்கள் அதிகளவில் அப்பகுதிக்கு சென்று வருகின்றனர்.

(மலையக நிருபர் இராமச்சந்திரன்)

Most Viewed