Back to Top

பேருந்து ஒன்று வீட்டின் மீது குடைசாய்ந்ததில் 37 பேர்  வைத்தியசாலையில்

பேருந்து ஒன்று வீட்டின் மீது குடைசாய்ந்ததில் 37 பேர் வைத்தியசாலையில்

February 27, 2018  12:42 pm

Bookmark and Share
வலப்பனை நில்தண்டாஹின்னவிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தெறிபாஹா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நில்தண்டாஹின்ன தெறிபாஹா பிரதான வீதியில் அபன்எல்ல பகுதியில் இன்று (27) காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 37 பேர் படுங்காயமடைந்து வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 37 பேரில் 13 பேர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து தொடர்பில் தெறிபாஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)

Most Viewed