Back to Top

உள்ளூர் சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

உள்ளூர் சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

February 28, 2018  11:42 am

Bookmark and Share
மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பிரதேசத்தில் உள்ளூர் சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (28) மாலை உன்னிச்சை குளம் அருகில் அம்பிளாந்துறையைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீன்பிடி வலைகளும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயித்தியமலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அப்பிரதேசத்தில் சிவில் உடையில் பதுங்கியிருந்த போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் அம்பிளாந்துறை - மாவடி முன்மாரி பிரதேசத்தினைச் சேர்ந்த 35 - 45 வயதுகளை உடையவர்கள்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(அம்பாறை நிருபர் சரவணன்)