Back to Top

மாணவர்கள் 06 பேர் திடீரென வைத்தியசாலையில் (படங்கள்)

மாணவர்கள் 06 பேர் திடீரென வைத்தியசாலையில் (படங்கள்)

March 6, 2018  01:03 pm

Bookmark and Share
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா நிவ்வெளி பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த ஆறு மாணவர்கள் திடீரென டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (06) செவ்வாய் கிழமை காலை 09.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது

குறித்த நிவ்வெளி தொழிநுட்ப பயிற்சி நிலையத்தின் வளாகத்தில் யூரியா என கூறப்படுகின்ற பசலை வகைகளை குறித்த தோட்டமக்கள் கொண்டுவந்து கொட்டியமையினால் மாணவர்கள் திடீர் சுகயீனம் ஏற்பட்டமையின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் 12 மாணவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது இதில் ஆறுமாணவர்கள் அனுமதிக்பட்டுள்ளதோடு ஏனையோர் வெளிநோயளர் பிரிவில் மருந்தினை பெற்று கொண்டு வீடு திரும்பி உள்ளதாக தொழிற்பயிற்சி நிலையத்தின் அதிபர் திருமதி சந்ராகுமாரி பெல்ஜிமன் தெரிவித்தார்

தொழிற்பயிற்சி நிலையம் நடத்திவரும் இடத்தில் பசலை வகைகளை அனுமதியை பெறாமல் கொண்டு வந்து கொட்டுவதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் நோர்வூட் தோட்ட உதவி முகாமையாளர் கூறுகையில் தற்பொழுது இயங்குகின்ற தொழிற்பயிற்சி நிலையமானது பொகவந்தலாவ தேயிலை பயிர்செய்கை கம்பனிக்கு சொந்தமானது.

இதில் மூன்றாவது மாடி கட்டிடத்தினை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வழங்கபட்டுள்ளதுடன் கீழ் மாடியினை தோட்ட நிர்வாக கலஞ்சியசாலையாக பயன்படுத்தி வந்தாகவும் அதில் பசலை வகைகளை கொண்டு வந்து களஞ்சியபடுத்தி வைத்திருப்பதாக நோர்வூட் தோட்ட முகாமையாளர் ருக்க்ஷான் பத்மகுல சூரிய தெரிவித்தார்.

(மலையக நிருபர் சதீஸ்)