Back to Top

 முத்தரப்பு கிரிக்கெட் - இந்தியா - பங்களாதேஷ் இன்று மோதல்

முத்தரப்பு கிரிக்கெட் - இந்தியா - பங்களாதேஷ் இன்று மோதல்

March 8, 2018  10:59 am

Bookmark and Share
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடைபெறுகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இன்று (08) நடக்கும் 2-வது லீக்கில் இந்திய அணி, பங்களாதேஷை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் இறுதிப்போட்டி வாய்ப்பில் சிக்கலின்றி நீடிக்க முடியும் என்பதால் இந்திய வீரர்கள் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டியது அவசியமாகும்.

பங்களாதேஷ் அணியில் தலைவர் ஷகிப் அல்-ஹசன் காயத்தால் கடைசி நேரத்தில் விலகியது அந்த அணிக்கு பின்னடைவாகும். ஆனாலும் அந்த அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. அதனால் பங்களாதேஷ் வீரர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று நம்பலாம். இவ்விரு அணிகள் இதுவரை ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவை அனைத்திலும் இந்தியாவே வெற்றி கண்டிருக்கிறது.