Back to Top

மொபிடெல் அனுசரணை வழங்கும் 81வது வருடாந்த 2 மைல் நீள கடல் நீச்சல் போட்டிகள்

மொபிடெல் அனுசரணை வழங்கும் 81வது வருடாந்த 2 மைல் நீள கடல் நீச்சல் போட்டிகள்

March 9, 2018  11:19 am

Bookmark and Share
இலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல் அனுசரணையுடன் இலங்கை நீர் வளங்கள் விளையாட்டு ஒன்றியத்தினால் (SLASU) ஒழுங்குசெய்யபபட்ட 81வது வருடாந்த 2 மைல் நீள கடல் நீச்சல் போட்டிகள் 2018, மார்ச் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.

இதில் பங்குபற்றிய நம் நாட்டின் நீச்சல் வீரர்களின் திறமைகளை அனைவரும் கண்டுகளித்தனர். பெருமை வாய்ந்த கிண்ணத்தினை சுவீகரித்துக்கொள்ள திறமைமிகு நீச்சல் வீரர்கள் போட்டியிட்டுக்கொண்டனர். இலங்கையில் அதிக திறமைகளைக் கொண்டுள்ள விiளாயட்டுப் போட்டியான நீர்வளங்கள் சார் விளையாட்டுக்களுக்கு ஆதரவினை அளித்திட தம்மை அர்ப்பணித்துள்ள மொபிடெல், மீண்டும் ஒரு முறை தமது கவனத்தை இப்போட்டிகள் மீது திருப்பியுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதான அனுசரணையாளராக காலடி எடுத்து வைத்துள்ள மொபிடெல், இவ்விளையாட்டுக்களுக்கு மீண்டும் புத்துயிரளித்திடவும், உள்நாட்டு திறமைசாலிகளுக்கு தங்கள் திறமைகளை இனங்கண்டு கொள்ள ஊக்கமளித்திடவும் எதிர்ப்பார்க்கிறது.

வெற்றிகரமான இந்நிகழ்வின் இறுதியில் மொபிடெலின் சிரேஷ்ட பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல், திரு. இசுறு திசாநாயக கருத்து தெரிவித்த போது, ´81வது வருடாந்த 2 மைல் நீள கடல் நீச்சல் போட்டிகளுக்கு பிரதான அனுசரணை வழங்கியதையிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பு மிக்க பாரம்பரியத்தைக் கொண்ட இப்போட்டிகளை நிலைத்திருக்கச் செய்வதில் நாம் பெருமையடைகிறோம். இந்நிகழ்வு, எம் தேசத்தை என்றாவது ஒரு நாள் பெருமைப்படுத்திடக்கூடியவர்கள் என எதிர்ப்பார்க்கக்கூடிய நீச்சல் வீரர்களை வெளிச்சம் போட்டுக்காட்டியது. இலங்கை நீர் வளங்கள் விளையாட்டு ஒன்றியத்துக்கு அவர்கள் வழங்கிய ஆதரவுக்காக நாம், எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் எமது நாட்டில் இந்நீர் வளங்கள் விளையாட்டுக்களை மேலும் முன்னேற்ற பல வழிகளிலும் தொடர்ந்தும் செயற்படுவோம்.´

இந்த இரண்டு நாள் நிகழ்வின் போது, பெண்கள் திறந்தவெளி போட்டிகளில் Rainbow Aquatic Club இன் அஷாந்தி டி சில்வா வெற்றிபெற்றார். இவர் 36.5 நிமிடங்களில் போட்டியை பூர்த்தி செய்தார். 15 வயதுக்குக் கீழ்பட்ட பெண்கள்; போட்டிகளில் கொழும்பு பிரிஜட் கன்னியர் மடத்தைச் சேர்ந்த கயத்மி டி எஸ் விஜேநாயக்க வெற்றி பெற்றார். இவர் 48.5 நிமிடங்களில் போட்டியைப் பூர்த்தி செய்தார்.

நீர்கொழும்பு லொயலா கல்லூரியைச் சேர்ந்த எம். டியான் எரோஷ் பர்னான்டோ 15 வயதுக்குக் கீழ்பட்ட ஆண்கள்; போட்டிகளில் 45.2 நிமிடங்களில் போட்டியைப் பூர்த்தி செய்து வெற்றி பெற்றார். ஆண்களுக்கான திறந்த வெளி போட்டிகளில் 39.5 நிமிடங்களில் போட்டியைப் பூர்த்தி செய்து நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த பீ. டிலங்க ஷெஹான் முதலாவது இடத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.

Star Fish Aquatic Academyயைச் சேர்ந்த சீ. ஜே. நானயக்கார மற்றும் Fishtail Aquatic Club இனைச் சேர்ந்த ஏ.பீ. மஹேந்த்ர ஆகிய இருவரும் ஆண்கள் மாஸ்டர்ஸ் போட்டிகளில் 15.4 நிமிடங்களில் முதலாவது இடத்தைப் பிடித்தனர்.திறந்த பெண்கள் சவால்; போட்டியில்; ஜின்தொட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எச். எல். கௌசல்யா 46 நிமிடங்களில் போட்டியைப் பூர்த்தி செய்து வெற்றி பெற்றார்.

இலங்கை நீர் வளங்கள் விளையாட்டு ஒன்றியம் ஆனது நீச்சல், திறந்த வெளி நீச்சல், டைவிங், வோட்டர் போலோ போன்ற திறந்த வெளி நீச்சல் போட்டிகளினை ஆதிக்கம் செய்யும் தேசிய நிறுவனமாக திகழ்கிறது. இந்த அனுசரணையானது நாட்டின் நீர் வளங்கள் விளையாட்டுக்களை சிறந்த நிலைமைகளைக் கொண்டிருக்க வழிவகுக்கிறது. அத்துடன் இந்நீர் வளங்கள் விளையாட்டுக்களை மேலும் முன்னேற்றவும் தம்மை அர்ப்பணித்துள்ளது.

Most Viewed