Back to Top

இளம் சாதனையாளர்களுக்கான தெரிவுகளை இரட்டிப்பாக்கியுள்ள கொமர்ஷல் வங்கி

இளம் சாதனையாளர்களுக்கான தெரிவுகளை இரட்டிப்பாக்கியுள்ள கொமர்ஷல் வங்கி

March 9, 2018  05:42 pm

Bookmark and Share
இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கான தனது பிரத்தியேக Achiever நடைமுறைக் கணக்கை கொமர்ஷல் வங்கிமீள் அறிமுகம் செய்துள்ளது. 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தக் கணக்கு சில புதிய பண்புகளோடு மீள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வயதெல்லை உடைய 25 ஆயிரம் ரூபா அல்லது அதற்கு அதிகப்படியான மாதச் சம்பளம் பெறும் நிறைவேற்று அதிகாரிகள் Achiever நடைமுறைக் கணக்கைத் திறக்க முடியும். இதற்கான குறைந்த பட்ச வைப்புத் தொகை பத்தாயிரம் ரூபாவாகும். இந்தக் கணக்கை திறப்பவர்களுக்கு NFC டெப் அன்ட் கோ தொழில்நுட்பத்துடன் கூடிய விற்பனைப் புள்ளி (POS) மற்றும் இணைய வழி கொள்வனவு பாவனைக்கான டெபிட் கார்ட்டும் வழங்கப்படும். அத்தோடுபதிவுக் கட்டணம் முதல் ஆண்டு வருடாந்தக் கட்டணம் என்பன இன்றிகிரடிட் கார்ட் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும் விண்ணப்பிக்கலாம் என்று வங்கி அறிவித்துள்ளது.

Achiever நடைமுறை கணக்கு வைத்திருப்பவர்கள் தமது கிரடிட் கார்ட்டின் பாவிக்கப்படாத தொகை மீதான முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட 75 வீதத்தைக் கடனாகப் பெறவும் முடியும். இரண்டு மாதம் வைப்பிலிப்பட்ட சம்பளத்தின் மீதான வங்கி மேலதிகப் பற்றாக ஆகக்கூடியது மூன்று லட்சம் ரூபாவரை உடனடி காசாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் மாதாந்த வைப்பிலிடப்படும் சம்பளத் தொகை போன்ற 15 மடங்கை குத்தகை வசதியாக அல்லது தனி நபர் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும். வங்கி மேற்கொள்ளும் மதிப்பீட்டின் படி உத்தரவாதம் அளிப்போர் எவரும் இன்றி மூன்று மில்லியன் வரையில் இதைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலதிகமாக Achiever நடைமுறைக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கின் தேக்க நிதியை சுபர் சேவர் சேமிப்புக் கணக்குக்கு மாற்றுவதன் மூலம் உயர் மட்ட வட்டியையும் பெறமுடியும். இந்தக் கணக்கை கட்டணங்கள் எதுவும் இன்றி வங்கி ஸ்தாபிக்கும். குறிப்பிட்ட குறைந்த பட்ச மீதியின் கீழ் இரு கணக்குகளும் தொடர்புபடுத்தப்படும்.

கொமர்ஷல் வங்கியின் இணைய வழி வங்கிச் சேவையில் நுழைவுக் கட்டணம் மற்றும் முதல் வருடக் கட்டணம் என்பன இன்றி இணைந்து கொள்ளவும் முடியும். கணக்கு வைத்திருப்பவர்ந கூற்றைபெற்றுக் கொள்ள விரும்பினால் இணைய வழி வங்கிச் சேவையை வருடாந்தக் கட்ணம் இன்றி பெற்றுக் கொள்ளவும் முடியும். அதேபோல் ஈபாஸ்புக் வசதிகளைப் பெறவிரும்பினாலும் கட்டணம் இன்றி பெற்றுக் கொள்ளலாம் என வங்கி மேலும் அறிவித்துள்ளது.

தொடர்ந்து ஏழு வருடங்களாக உலகின் தலை சிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 261 கிளைகளுடனும், 756 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது இலங்கையின் தலை சிறந்த வங்கி, மிகஉறுதியான வங்கி, மிக கௌரவமான வங்கி என பல விருதுகளை உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கடந்த பல ஆண்டுகளில் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2016ல் மாலைதீவில் முதல் வரிசை வங்கி யொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. முழு அளவிலான தனது சொந்த பணப்பரிமாற்ற சேவைகளை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.