Back to Top

முத்தரப்பு தொடரின் மூன்றாவது போட்டி இன்று

முத்தரப்பு தொடரின் மூன்றாவது போட்டி இன்று

March 10, 2018  11:57 am

Bookmark and Share
முத்தரப்பு டீ 20 தொடரில் இன்று இலங்கை - பங்களாதேஷ் அணிகள் பிரேமதாசா மைதானத்தில் இரவு 7 மணிக்கு மோதுகின்றன.

இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் பங்களாதேஷ் அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் இலங்கை அணி இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.

மேலும் சமீபத்தில் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் 3 வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் இலங்கை அணி கோப்பையை வென்றுள்ளதால் மீண்டும் ஒரு முறை ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறும் முனைப்பில் இந்த ஆட்டத்தை அணுகுகிறது. இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய குசால் பெரேராவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

இதேபோல் பந்து வீச்சில் துஷ்மந்தா சமீரா, ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் பங்களாதேஷ் அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர்.

பங்களாதேஷ் அணி தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டுள்ளது. காயம் காரணமாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இந்தத் தொடரில் விளையாடாதது அந்த அணிக்கு பெரிய இழப்பாக அமைந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள் 55 பந்துகளை ஓட்டங்கள் சேர்க்காமல் வீணடித்தனர்.

இதனால் இந்த விஷயத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.