Back to Top

'தங்கங்களின் சமர்' போட்டிக்கு மீண்டும் புத்தூக்கம் அளிக்கும் எலிபன்ட் ஹவுஸ் மற்றும் கீல்ஸ் கிரெஸ்ட்

'தங்கங்களின் சமர்' போட்டிக்கு மீண்டும் புத்தூக்கம் அளிக்கும் எலிபன்ட் ஹவுஸ் மற்றும் கீல்ஸ் கிரெஸ்ட்

March 12, 2018  04:47 pm

Bookmark and Share
மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரிக்கும், மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 68 ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டியான ´தங்கங்களின் சமர்´ 2018 இற்கு எலிபன்ட் ஹவுஸ் மற்றும் கீல்ஸ் கிரெஸ்ட் மீண்டும் ஒருமுறை உணவு, குடிபானம் மற்றும் ஐஸ்கிறீம் பங்குதாரராக இணைந்து புத்தூக்கமளிக்கவுள்ளது.

´தங்கங்களின் சமர்´ பிக் மட்ச் போட்டி மார்ச் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் மொரட்டுவை டி.சொய்ஸா மைதானத்தில் இடம்பெறவுள்ள அதேசமயம், 33 ஆவது வருடமாக விளையாடப்படும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் போட்டிகளுக்கு எலிபன்ட் ஹவுஸ் மற்றும் கீல்ஸ் கிரெஸ்ட் வழங்கிவரும் ஆதரவின் பலனாக 68 ஆவது வருடமாகவும் நடைபெறவுள்ள ´தங்கங்களின் சமர்´ போட்டிக்கு உணவு, குடிபானம் மற்றும் ஐஸ்கிறீம்களை வழங்க முன்வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு பிக் மட்ச் போட்டிகளில் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

´வாழ்க்கைக்கு அளிக்கும் நன்மை´க்கு காண்பித்துவரும் அர்ப்பணிப்பு காரணமாக எலிபன்ட் ஹவுஸ் புதிய பிரிவுகளில் முனைப்புடன் செயற்பட்டு Lemoki, ஐசடோனிக் F5, பழச்சுவை மிக்க FitO போன்ற குடிபானங்களை வழங்கி வருகிறது. அதேநேரம், தனது ஆரோக்கியமான மற்றும் கிறீம் சுவை, “Imorich” போன்ற முன்னணி நம்பகமான தயாரிப்புக்கள், இளைஞர்களை கவரும் “Wonderbar” மற்றும் “Wondercones” போன்ற உற்பத்திகளால் உள்ளூர் ஐஸ்கிறீம் சந்தையில் எலிபன்ட் ஹவுஸ் முன்னணி வகிக்கிறது.

ஆரோக்கியத்தன்மை மற்றும் சௌகரியம் போன்றவற்றாலும், சிறந்த சுவையினாலும் இலங்கையர்கள் மத்தியில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நம்பிக்கையை வென்றுள்ள கீல்ஸ் கிரெஸ்ட் தரமான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும், சிற்றுண்டிகளையும் கொண்டுள்ளது.

´தங்கங்களின் சமர்´ 2018 போட்டிகளில் மீண்டும் பங்குதாரராக எலிபன்ட் ஹவுஸ் மற்றும் கீல்ஸ் கிரெஸ்ட் ஆகியன போட்டிகளில் சுவை நிர்ணயிப்பாளர்களாக முக்கிய பங்காற்றவுள்ளது. ´தங்கங்களின் சமர்´ போட்டியில் விளையாடுபவர்கள் மற்றும் கண்டுகளிப்பவர்களுக்கான குடிபான, உணவு மற்றும் ஐஸ்கிறீம் தேவையை நிறைவேற்றுவது மாத்திரமன்றி மொரட்டுவ மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் பிக் மட்ச் ஆர்வத்தை பூர்த்திசெய்ய முனைப்புடன் செயற்படுகிறது´ என பிரிவு தலைவர் எலிபன்ட் ஹவுஸ் குடிபானம் / பிரதித் தலைவர் ஜோன் கீல்ஸ ஹோல்டிங்ஸ் (ஜே.கே.எச்) பெலிந்திர வீரசிங்க தெரிவித்தார்.

Most Viewed