Back to Top

புத்தளத்தில் பாதுகாப்பு செயற்பாடுகளை INSEE சீமெந்து தொடர்ச்சியான 9வது வருடமாகவும் முன்னெடுப்பு

புத்தளத்தில் பாதுகாப்பு செயற்பாடுகளை INSEE சீமெந்து தொடர்ச்சியான 9வது வருடமாகவும் முன்னெடுப்பு

March 13, 2018  03:18 pm

Bookmark and Share
கடந்த ஒன்பது ஆண்டுகளாக INSEE சீமெந்து நிறுவனமானது, புத்தளம் அறுவக்காலு பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் காப்பகத்தில் வாழும் விலங்குகளை மீட்டு, பாதுகாத்து கவனமான அவற்றை தொடர்ச்சியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

மெதுவாய் நடமாடும் ஊர்வன மற்றும் நடந்து திரியும் விலங்குகளை மீட்கும் நடவடிக்கையில் நிறுவனத்தின் காப்பகம் அமையப்பெற்றுள்ள வட மேல் மாகாணத்தில் குறித்த விலங்கு மீட்பு, பாதுகாப்பு விடுப்பு நடவடிக்கை செயற்பாட்டில் உத்தியோகபூர்வ பங்காளராய் IUCN (இயற்கை பாதுகாப்பு சர்வதேச ஒன்றியத்துடன்) இணைந்து INSEE சீமெந்து முன்னெடுத்து வருகிறது. இதனூடாக குறித்த பிரதேசத்தில் நிறுவனத்தின் நடவடிக்கைகளின் மூலமாக, இலகுவில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் காணப்படும் விலங்குகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதில் IUCN உடன் இணைந்து INSEE சீமெந்து நிறுவனம் உறுதி செய்து வருகிறது.

INSEE சீமெந்தின் முக்கியமான அர்ப்பணிப்பு விலங்குகளை மீட்டு பாதுகாப்பதாக அமைந்துள்ளதுடன், இந்நடவடிக்கை குழுமத்தின் நிலைபேறாண்மை கொள்கையின் முக்கிய அங்கமாகவும் அமைந்துள்ளது. இதனூடாக சீமெந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு பெறுமதி சேர்த்து ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது உயிரியல் பரம்பலை பாதுகாப்பதில் குழுமம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்த நடவடிக்கையில் பெருமளவான தன்னார்வ செயற்பாட்டாளர்கள் ஆண்டில் ஈடுபட்டுள்ளனர். 2017ஆம் ஆண்டில் INSEE சீமெந்து சுமார் 2000க்கும் அதிகமான விலங்குகளை பாதுகாப்பாக மீட்டு நிறுவனம் பேணும் சிறந்த சூழல் சார் கூட்டாண்மை கலாசாரத்தை பேணியிருந்தது. இதுவரையில் இந்த நடவடிக்கையின் மூலமாக 12,300க்கும் அதிகமான மெதுவாக நகரும் விலங்குகள் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

• விலங்குகளை பாதுகாப்பதற்கு மேலதிகமாக, இந்த ஆண்டில் INSEE சீமெந்தினால் விலங்குகளுக்கு மேலாக தாவரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

• முக்கியமாக இலகுவில் அழிவுறக்கூடிய நிலையிலுள்ள தாவரங்களின் கன்றுகள் இனங்காணப்பட்டு, அடுத்த ஆண்டு வனாந்தர செய்கையில் பேணப்படும் வரையில் அவை வளாகத்தில் பாதுகாப்பாக பேணப்படுகின்றன.

• 3000க்கும் அதிகமான தாவர கன்றுகள் இவ்வாறு இனங்காணப்பட்டு, பாதுகாப்பான முறையில் பேணுவதற்காக பெறப்பட்டுள்ளன.

இந்த செயற்றிட்டத்தின் உத்தியோகபூர்வ பங்காளரான IUCN உலகின் பழமையான மற்றும் மாபெரும் சூழல்சார் நிறுவனமாகவும் செயலாற்றி வருவதுடன், நிலைபேறான செயற்பாடுகளுக்கான முன்னணி அதிகார சபையாகவும் அமைந்துள்ளது. INSEE சீமெந்தின் விலங்கு பாதுகாப்பு செயற்பாட்டுக்கு அவர்களின் அனுபவத்தினூடாக பங்களிப்பு மூலமாக இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இலகுவில் பாதிப்புறக்கூடிய பகுதிகளை கண்காணிப்பது, விலங்குகளை மீட்டு அவற்றை பாதுகாப்பான பகுதிகளில் விடுவது மற்றும் மீள்வனாந்தர செய்கைக்காக பகுதிகளை தயார்ப்படுத்துவது மற்றும் இறுதியாக விலங்குகளின் புனருத்தாண செயற்பாடுகளை கண்காணிப்பது போன்ற நான்கு பிரதான உயிரியல் பரம்பல் செயற்பாடுகளுக்கு IUCN இன் நிபுணத்துவம் மற்றும் ஆதரவு முக்கியமானதாக அமைந்துள்ளது.

IUCN ன் நிகழ்ச்சி ஒழுங்கிணைப்பாளரான ஷமென் விதானகே இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில், ´INSEE சீமெந்து விலங்குகளை பாதுகாப்பது தொடர்பில் அர்ப்பணிப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த பெறுமதி வாய்ந்த நடவடிக்கையை எதிர்காலத்திலும் INSEE சீமெந்தின் பங்களிப்புடன் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளோம்´ என்றார்.

INSEE சீமெந்தின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் தொடர்பாடல்கள் பணிப்பாளர் பர்ஸானா கான் கருத்துத் தெரிவிக்கையில், ´அறுவக்காலு பகுதியில் அரிதான உயிரியல் பரம்பல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு IUCN இனால் வழங்கப்படும் பங்களிப்புக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். இதனடிப்படையில் IUCN உடன் சுமார் ஒரு தசாப்த காலமாக நாம் பங்காண்மையை பேணி வருகிறோம். அவர்களின் நிபுணத்துவம் வரவேற்கத்தக்கது. எமது புவியின் எதிர்காலம் குறித்து கரிசனை கொள்ளும் அனைவருக்கும் அவர்கள் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளனர்´ என்றார்.

அறுவக்காலு பகுதியில் உயிரியல் பரம்பல் நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு விஞ்ஞான ரீதியான முறையை INSEE சீமெந்து தற்போது பின்பற்றி வருகிறது. தாவரங்களின் அடர்த்தி அதிகரித்ததும், பாதுகாக்கப்பட்ட விலங்குகள் மற்றும் தாவரங்கள் இயற்கையான சூழல் படிப்படியாக மீளமைக்கப்படும்.

Most Viewed