Back to Top

கனடா பிரஜை வவுனியாவில் தற்கொலை

கனடா பிரஜை வவுனியாவில் தற்கொலை

March 13, 2018  11:00 pm

Bookmark and Share
வவுனியா - கோவில்குளம் பிரதேசத்தில் வீடொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்ட கனடா குடியுரிமை பெற்ற தமிழர் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.

கே. சத்யசீலன் எனும் 83 வயதுடையவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கனடாவில் இருந்து இலங்கை வந்த அவர் வவுனியாவில் உள்ள அவரது மகனது வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் உயிரிழந்ததிற்கான காரணம் இதுவரையில் இனங்கானப்டவில்லை.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.