Back to Top

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 28 பேர் 9A சித்தி (படங்கள்)

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 28 பேர் 9A சித்தி (படங்கள்)

March 29, 2018  01:10 pm

Bookmark and Share
க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 28 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியில் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

இப்பாடசாலையிலிருந்து இம்முறை பரீட்சைக்கு 191 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இதில் தமிழ் மொழி மூலம் 25 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 03 மாணவர்களும் உள்ளிட்ட 28 மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளதுடன் 8A சித்திகளை 23 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இப்பாடசாலையில் இதுவரை அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்த வருடமாக இதுவாக காணப்படுவதாகவும் 2016 ஆம் ஆண்டு 14 மாணவர்கள் மாத்திரம் 9A சித்திகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்தார்.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)