Back to Top

புகையிரதத்துடன் மோதிய கப் ரக வாகனம் (படங்கள்)

புகையிரதத்துடன் மோதிய கப் ரக வாகனம் (படங்கள்)

April 8, 2018  06:25 pm

Bookmark and Share
இன்று (08) முற்பகல் 10.15 மணியளவில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் புகையிரதம் மற்றும் கப் ரக வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தவசிக்குளம் வீதியில் இருந்து வருகை தந்த கப் வாகனம் தண்டவாளத்தைக் கடந்து ஏ9 பிரதான வீதிக்கு வரும் போது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதம் மோதியுள்ளது.

இதனால் வாகனத்தி்ல் பயணித்த 18 வயது இளம்பெண்ணொருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். இவர் சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதிக்கு எந்தவிதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

படுகாயமடைந்தவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் கொடிகாமம் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(யாழ். நிருபர் ரமணன்)