Back to Top

பேண்தகைமை அறிக்கையிடலுக்காக CDB க்கு விருது

பேண்தகைமை அறிக்கையிடலுக்காக CDB க்கு விருது

April 9, 2018  02:10 pm

Bookmark and Share
பேண்தகைமை என்பதற்கமைய தனது வியாபார மாதிரியை நிறுவியிருந்த சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), அண்மையில் நடைபெற்ற ACCA இலங்கை பேண்தகைமை அறிக்கையிடல் விருதுகள் 2017இல் இணை வெற்றியாளராக தெரிவாகியிருந்தது. நிதி மற்றும் காப்புறுதித்துறையில் CDB இந்த விருதை சுவகீ ரிதத்ருந்ததுடன், கடந்த ஆண்டில் இந்தப் பிரிவில் இரண்டாமிடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச அறிக்கையிடல் செயற்பாட்டு (GRI) விதிமுறைகளுக்கமைய தன்னை உறுதி செய்துள்ளதுடன், தனது அறிக்கையிடல் ஊடாக பொருளாதார, சூழல் மற்றும் சமூக தாக்கம் பற்றிய விடயங்களை மேலும் உறுதி செய்துள்ளது.

பூரணத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் தொடர்பாடல் ஆகியவற்றின் அடிப்படையில் அறுபதுக்கும் அதிகமான அறிக்கைகளை நடுவர்கள் குழு மீளாய்வு செய்திருந்ததுடன், CDB இன் அறிக்கையில் காணப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் மீது தனது கவனத்தை செலுத்தியிருந்தது. குறிப்பாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தலைவர் மற்றும்முகாமைத்துவ பணிப்பாளரின் செய்தி குறிப்பிடப்பட்டிருந்தமையானது, பரந்தளவு பங்காளர்களுடன் தொடர்பாடல்களை பேணுவதற்கு உந்துதலளிக்கும் வகையில் அமைந்திருந்ததை குறிப்பிட்டிருந்தது. வியாபார மாதிரி சகல பெறுமதி செயற்பாட்டாளர்களையும் உள்வாங்கி பரந்த நோக்குடன், சகல குடிமக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் சென்றடையும் வகையில் அமைந்திருந்தது. பங்காளர்களின் ஈடுபாடு என்பது அவர்களின் கரிசனைகளுடன் தொடர்புபட்டதாக அமைந்திருந்தது. வெளிப்படுத்தப்பட்டிருந்த ´பேண்தகைமை உணர்வு´ என்பது சிறந்த மாதிரியாக அமைந்திருந்ததுடன், பரிபூரண அடிப்படையில் உள்ளம்சங்களை கொண்டிருந்தது. சமூகஃஉறவு மூலதனம் என்பது உள்ளீடு மற்றும் வெளியீடு அடிப்படையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களில் குறிப்பிடப்பட்டிருந்த பெறுமதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. காபன் உறுதியளிக்கப்பட்ட நிறுவனம் எனும் வகையில், தெற்காசிய பிராந்தியத்தில் சான்றைப் பெற்ற முதலாவது நிதிசார் நிறுவனமாகவும் CDB திகழ்கிறது.

முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார தெரிவிக்கையில், ´பேண்தகைமை தொடர்பில் கரிசனை கொண்டுள்ள நிறுவனமாக நாம் எப்போதும் திகழ்ந்து வருகிறோம். நீண்ட கால இலக்குகள் அடிப்படையில் எமது வியாபார மாதிரி அமைந்துள்ளதுடன், எமது நிறுவனத்தின் கொள்கைகள் ஊடாக எமது பேண்தகைமை அபிவிருத்தி இலக்குகளை எய்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. இவை அனைத்தும் முறையாக அறிக்கையிடப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. இது எம்மை பொறுத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்த செயன்முறையாக அமைந்துள்ளதுடன், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுடன், எமது பங்காளர்கள் மீது பொறுப்புக்கூறி நீண்ட கால அடிப்படையில் உறவுகளை கட்டியெழுப்பிக் கொள்ள ஏதுவாக அமைந்திருக்கும்.´ என்றார்.

நாணயக்கார அவர்களை பொறுத்தமட்டில், CDB இனால் அறிமுகம் செய்யப்பட்டிருந்த சிறந்த செயன்முறைகள் கூட்டாண்மை துறையில் முன்நோக்கி கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ´நாம் தற்போது விருதை வென்ற பரிபூரண நிதிசார் தீர்வுகளை வழங்கும் இலங்கையின் சிறந்த ஏழு வங்கிசாரா நிதிசார் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறோம். இதனூடாக துறைக்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய பொறுப்பை நாம் கொண்டுள்ளதுடன், சிறந்த மாற்றத்துக்கு வழிகோல வேண்டிய நிலையிலுள்ளோம். எமது கூட்டாண்மை மனநிலை என்பது சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் சிறந்த செயன்முறைகளில் கவனம் செலுத்தி, அவற்றை பின்பற்றுவது குறித்து கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது. இதை நாம் நிறுவப்பட்டது முதல் முன்னெடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு நாம் இரண்டாமிடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட போது, அறிக்கையிடலில் எல்லைகளை கடக்க வேண்டிய மேலதிக ஊக்குவிப்பை எமக்கு வழங்கியிருந்தது. நாம் இவ்வாறு பின்பற்றிய செயன்முறைகளினூடாக தற்போது பலன் கிடைத்துள்ளமை வரவேற்கத்தக்கது. நிதி மற்றும் அறிக்கையிடல் பிரிவில் எமக்கு விருது கிடைத்துள்ளமையையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கிறோம்.´ என்றார்.

வங்கிசாராத நிதிசார் நிறுவனங்களில் காணப்படும் முன்னணி பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முன்னோடியாக சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி திகழ்கிறது. நாடளாவிய ரீதியில் 71 கிளைகளை கொண்டுள்ளதுடன், நவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை பின்பற்றி வருகிறது. இலங்கையில் நிதிசார் கொடுக்கல் வாங்கல்கள் முன்னெடுக்கப்படும் முறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.