Back to Top

Landmark Developers வழங்கும்'Nano Homes' திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Landmark Developers வழங்கும்'Nano Homes' திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

April 9, 2018  02:20 pm

Bookmark and Share
நவீன இல்லங்களுக்கான புத்தாக்கமான எண்ணக்கருக்கள் மற்றும் எண்ணங்களுடன் இலங்கையில் புதிய ஆதன நிர்மாணிப்பாளராக உருவெடுத்துள்ள Landmark Developers, முன்கூட்டியே பொறியமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிலைபேற்றியல் கொண்ட நிர்மாணத்தின் கூட்டிணைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட முதன்முதலான ஒரு தீர்வாக மாறியுள்ள ´Nano Homes”´ என்ற செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

தமக்கென முதன்முதலாக வீடொன்றை வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ள தற்காலத்து இளம் தலைமுறையினர் அல்லது சிரமங்களைக் குறைத்து, தமது ஓய்வுகாலத்தில் குறைந்தளவு செலவில் வீட்டைப் பேணிப் பராமரிக்க விரும்புகின்ற வயோதிபர்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக அடக்கமான வீடமைப்புத் தீர்வுகளான Nano Homes அமைந்துள்ளன. சாதாரண Nano Homes இல்லமொன்று இரண்டு அல்லது மூன்று மாடி வீடாக, 1500 சதுர அடி முதல் மொத்த இட அளவைக் கொண்டிருக்கும். 2 வாகன தரிப்பிடங்கள், 2 அல்லது 3 படுக்கை அறைகள், 2 குளியறைகள், சரக்கறை, சமையல் அறை, சாப்பாட்டு அறை மற்றும் வரவேற்பறை ஆகியவற்றை அது கொண்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட நிலப் பரப்பினை உச்ச அளவில் பயன்படுத்தி, அடக்கமான அழகுடன் நிர்மாணிக்கப்படுவது Nano Homes இன் மிகவும் கவர்ச்சியான அம்சங்களுள் ஒன்றாகும். Nano Homes கொண்டுள்ள இந்த அடக்கமான தோற்றப்பண்பானது மக்கள் மிகவும் நெருக்கமாக வாழுகின்ற ஒரு சமூக உணர்வைத் தோற்றுவிக்கின்றது. Nano Homes அனைத்தும் மிகச் சிறந்த வாழ்க்கை அனுபவம் மற்றும் தொழில்நுட்ப திறன்களின் இணைப்பைக் கொண்டுள்ளன. வாடிக்கையாளர் தனது தேவைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் வடிவமைத்து, நிர்மாணிக்கின்ற சுதந்திரம் மற்றும் நெகிழ்வுப்போக்குக்கு மேலாக, அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை ஒவ்வொரு இல்லமும் கொண்டுள்ளது. அறைகள் மற்றும் குளியலறைகளின் எண்ணிக்கை, தரையின் வகை போன்ற இல்லத்தின் முக்கியமான அம்சங்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பினை இது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், ஏனைய Nano Homes உடன் ஒப்பிடுகையில், வேறுபட்ட, தனித்துவமான வாழ்விடத்தை அவர்கள் நிர்மாணித்துக் கொள்வதற்கான புத்தாக்கமான அம்சங்களையும் அவர்கள் சேர்த்துக்கொள்ள வழிகோலுகின்றது.

வடிவமைப்புத் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், புகழ்பெற்ற வர்த்தகப்பெண்மணி ஒருவரின் தலைமைத்துவத்தின் கீழ், இளமையான, அர்ப்பணிப்பு மிக்க மற்றும் உற்சாகமான அணியால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற Landmark Developers புத்தாக்கமான அசைவற்ற ஆதன இருப்புத் தீர்வுகள் அனைத்தையும் ஒரே இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வகையில் தனது சேவைகளை வழங்கி வருவதுடன், ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் பல்வேறுபட்ட தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் கூட்டுச் சூழலுடன், ஒட்டுமொத்த சேவைகளையும் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. வடிவமைப்பு மற்றும் நிர்மாண அனுபவத்துடன் சேர்த்து, சட்டம், நிதி மற்றும் வங்கிச்சேவை ஆலோசனை சேவைகளையும் அது வழங்கி வருகின்றது. கலிபோர்ணியா மற்றும் டெக்சாஸ் மாநிலங்களை இலக்காகக் கொண்டு, அமெரிக்காவில் ஒரு பங்குடமையையும் Landmark தற்போது கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் தனது அசைவற்ற ஆதன இருப்புத்துறை பங்காளர்களுடன் இணைந்து மெல்பேர்ண், சிட்னி, பேர்த் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய மாநகரங்களில் இயங்கி வருகின்றது.

“Nano Homes” இன் தனித்துவமான வடிவமைப்பு தொடர்பில் Landmark Developers இன் முகாமைத்துவப் பணிப்பாளரானஎக்சித் ஹப்பன்கம அவர்கள் விளக்குகையில், ´அசைவற்ற ஆதன இருப்புத் துறையில் இலங்கை பின்பற்றி வருகின்ற பாரம்பரியமான அணுகுமுறைக்குச் சவால்விடுக்கும் குறிக்கோளுடன் Landmark இத்துறையில் நுழைந்துள்ளது. ஆபத்துக்களைக் கையிலெடுப்பதன் மூலமாகவே சாதிக்க முடியும் என நம்புகின்ற நாம், சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நாம் உணர்கின்ற‘Nano Homes’ என அழைக்கப்படுகின்ற இப்புதிய எண்ணக்கருவினை அறிமுகப்படுத்தியுள்ளோம். நவீன சிந்தனையாளர்கள், புதுமையான வாழ்விட எண்ணக்கருக்களை முயற்சி செய்து பார்ப்பதில் ஆவல் கொண்ட புத்தாக்கமான மற்றும் அவர்களின் எண்ணங்களை பிறரால் விளங்கிக்கொள்ள முடியாத தொழில் முயற்சியாளர்கள், எத்தனை சதுர அடி விஸ்தீரணம் கொண்ட இடத்தில் வாழ்கின்றோம் என்பதை விடுத்து, கலைநயம் மிக்க வாழ்விடத்திற்கு முன்னுரிமையளிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ள கலைஞர்கள் என அனைவருக்கும் பொருத்தமான தீர்வாக Nano Homes அமைந்துள்ளன. முற்கூட்டியே பொறியமைக்கப்பட்ட பாகங்கள் மற்றும் நிலைபேற்றியல் கொண்ட நிர்மாணத்தின் இணைப்பினை உபயோகித்து இவை அனைத்தும் நிர்மாணிக்கப்படுவதால் இதன் மூலமாக ஈட்டிக்கொள்கின்ற சேமிப்புக்கள் ஈற்றில் எமது வாடிக்கையாளர்களுக்கே பயனளிக்கின்றன,´ என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், ´அடுக்குமனை ஒன்றுடன் Nano Homes இனை ஒப்பிடுகையில் Nano Homes சிறப்பானது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, Nano Homes இனை நிர்மாணிக்கும் போது சூழலுக்கு அழிவு ஏற்படாததுடன், அயலவர்களுக்கும் இடையூறு விளைவிக்கப்படுவதில்லை. தற்காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் அடுக்குமனைத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதால் எண்ணற்ற பிரச்சனைகளை அவை தோற்றுவிக்கின்றன. குத்துக்கால் அகழ்வு காரணமாக சூழவுள்ள வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்படுகின்றமை, ஈரநிலங்கள் போன்ற இயற்கை வளங்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகள், இரைச்சல் காரணமாக ஏற்படும் மாசடைதல், அதிகரித்த போக்குவரத்து நெருக்கடி மற்றும் அமைதியான அயற்புற சூழலுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த சீர்குலைவு போன்றன அவற்றுள் சிலவாகும். எனினும் Nano Homes இனைப் பொறுத்தவரையில் எளிமையான, அடக்கமான, சூழலுக்கு தீங்கற்ற மற்றும் நிலைபேற்றியல் கொண்ட வீடமைப்புத் தீர்வுகள் மீது கவனம் செலுத்துவதால், அத்தகைய சீர்குலைவுகளுக்கு முற்றிலும் எதிரான போக்கினைக் கொண்டுள்ளன,´ என்று குறிப்பிட்டார்.

Nano Homes நிர்மாணத்திற்குப் புறம்பாக கேந்திர இடங்களில் அமைந்துள்ள அடிப்படை, இடைத்தர மற்றும் உயர் அடுக்கு கட்டடங்களை குடியிருப்பு மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக நிர்மாணிக்கும் பணிகளிலும் Landmark Developers கவனம் செலுத்தியுள்ளதுடன், அத்தகைய அசைவற்ற ஆதன இருப்புக்களை நிர்வகித்து, வாடிக்கையாளர்களுக்கு நிர்மாண நிபுணத்துவம் மற்றும் சேவைகளையும் வழங்கி வருகின்றது. தலாஹேன, மாலபே, அத்துருகிரிய, தலங்கம, கடுவெல, கொட்டாவ மற்றும் ஹோமாகம போன்ற வேகமாக அபிவிருத்தியடைந்து வருகின்ற புறநகர்ப் பிரதேசங்களில் அமைந்துள்ள, நவீன, சமகால வடிவமைப்புக்கள் மற்றும் கட்டடக்கலை நயத்துடனான, கட்டுபடியாகும், உயர் தர இல்லங்களை உள்ளடக்கிய “Comfort Dwellings” இந்நிறுவனத்தின் கண்ணைக்கவரும் புத்தாக்கமான தீர்வுகளுள் ஒன்றாகும்.