Back to Top

வடக்கில் 680 ஏக்கர் காணி 13 ஆம் திகதி விடுவிக்கப்படும்?

வடக்கில் 680 ஏக்கர் காணி 13 ஆம் திகதி விடுவிக்கப்படும்?

April 11, 2018  09:42 am

Bookmark and Share
யாழ். வலிகாமம் வடக்கில் 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 680 ஏக்கர் காணி எதிர்வரும் 13 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் சிங்களப் புத்தாண்டுப் பரிசாக வலி. வடக்கில் காணி விடுவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க, நல்லிணக்க புரத்தில் நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

வறுத்தலைவிளானில் வீடு கையளிப்பு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போது மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுரேஷ் பங்கேற்றிருந்தார். இதன்போது எதிர்வரும் 13 ஆம் திகதி வலி. வடக்கில் 680 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கொழும்பு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் வலி. வடக்கில் 16 ஆம் திகதி 500 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என தெரிவித்திருந்தார் அதனால் காணி விடுவிப்புத் தொடர்பில் குழப்பம் நிலவியது.

இந்த நிலையில் 16 ஆம் திகதி விடுவிக்கப்படும் என கூறப்பட்ட காணிகளை 13 ஆம் திகதி விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Most Viewed