Back to Top

லஸ்ஸன ஃபுளோரா கிளை யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு

லஸ்ஸன ஃபுளோரா கிளை யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு

April 11, 2018  10:31 am

Bookmark and Share
இலங்கையின் முன்னணி மலர்சார் தீர்வுகள் வழங்குனராக திகழும் லஸ்ஸன ஃபுளோரா நிறுவனம் தனது புத்தம்புதிய காட்சியறையை வளர்ச்சியடைந்து வரும் நகரான யாழ்ப்பாணத்தில் இலக்கம் 754A, வைத்தியசாலை வீதி என்ற முகவரியில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. இதன்மூலம் நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் நீண்ட தாமதத்திற்குள்ளாகி இருந்த வட மாகாணத்திலான பிரசன்னத்தை நிறுவனம் தற்போது உறுதி செய்திருக்கின்றது.

போதுமான வாகனத் தரிப்பிட வசதியுடன் மிகவும் சௌகரியமான இடத்தில் மூலோபாய அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இக் காட்சியறையானனது, யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் சந்திக்கு அருகாமையில் காணப்படுகின்றது.

´நேரடியாக பண்ணைகளில் இருந்து தருவிக்கப்பட்ட புத்தெழில் மாறாத மலர்களை லஸ்ஸன ஃபுளோரா நிறுவனம் வட குடாநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்கின்ற அதே நேரத்தில், இணையவழி (ஒன்லைன்) பரிசு வசதிகளை இலவசமாக வழங்கல், திருமண அலங்கரிப்பு வசதி மற்றும் மேலும் பல சேவைகளையும் வழங்குகின்றமையால், எமது நிறுவனம் யாழ்ப்பாணத்தில் காலடி பதிக்கின்றமையாது ஒரு புரட்சியாக அமைந்துள்ளது´ என்று லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர். லசந்த மாளவிகே தெரிவித்தார்.

இந்து மக்களை கணிசமாகக் கொண்ட யாழ்ப்பாணமானது, எப்போதும் பெருமளவிலான மலர்களால் வாழ்வில் குறிப்பிடத்தக்க மைற்கற்களை கொண்டாடியுள்ளது. புதுமை மாறாத நறுமணமுள்ள மலர்களை பெற்றுக் கொள்வது தொடர்பாக யாழ் குடாநாட்டில் காணப்பட்ட வெற்றிடத்தை கடைசியாக லஸ்ஸன ஃபுளோரா நிவர்த்தி செய்திருக்கின்றது.

1200 சதுர அடி பரப்பளவிலான இக்காட்சியறை, விலையுயர்ந்த குளிர்பதன அறையை கொண்டுள்ளது. பெலிஹூல் ஓயா, கெப்பிட்டிபொல மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் அமைந்துள்ள லஸ்ஸன ஃபுளோரா நாற்றுப் பண்ணைகளில் டச்சு கூட்டுமுயற்சியின் கீழ் வளர்கின்ற அதேநேரத்தில் அப்பண்ணைகளில் இருந்து நேரடியாக பறித்தெடுக்கப்பட்ட மலர்களை புத்தெழில் மாறாமல் பேணுவதை இக்குளிர்பதன அறையானது உறுதிப்படுத்துகின்றது.

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்ததையடுத்து லஸ்ஸன ஃபுளோரா நிறுவனமானது, ஒன்லைன் பரிசு வசதிகள் பலவற்றையும் வழங்குகின்றது. இவ் வசதி வட மாகாணம் முழுவதும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற அதேவேளையில், யாழ் நகர எல்லைக்குள் இலவச விநியோக சேவையையும் பெற்றுக் கொள்ள முடியும். மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களுக்கு மலர்களை விநியோகம் செய்வதற்கான குறைந்தளவான விநியோகக் கட்டணம் ரூபா 200 இலிருந்து ஆரம்பமாகின்றது.

டாக்டர் மாளவிகே குறிப்பிடுகையில், இணையவழி சேவை நுழைவாயிலான www.lassanaflora.com மூலமும் அதேபோன்று மலர்கள், கேக் வகைகள், பழக் கூடைகள், மென் விளையாட்டு பொருட்கள், நறுமணங்கள் மற்றும் பல உற்பத்திகள், சேவைகளை வழங்குவதன் ஊடாகவும் - இப் பிராந்தியத்தில் வாழும் மக்களை உலகெங்கும் உள்ள அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், இப்பகுதியில் காணப்பட்ட நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இந்துத் திருமணங்களையும் ஏனைய இனத்தவரின் திருமணங்களையும் அவற்றிற்கே உரிய வர்ணமய தன்மையுடனும் உள்ளார்ந்த விடயங்களில் கூடிய கவனத்துடனும் அழகுபடுத்தும் பொருட்டு, லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்தின் புகழ்பெற்ற நிகழ்ச்சி முகாமைத்துவ நிறுவனப் பிரிவாகக் காணப்படும் ´லஸ்ஸன ஃபுளோரா இவன்ட்ஸின்´ ஆலோசனையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இங்கு வழங்கப்படுகின்ற பெறுமதிசேர் சேவைகளுள் - அறிமுக வெகுமதிகள், திருமணங்களுக்கான இலவச ஆலோசனைச் சேவை, திருமண அலங்காரங்களுக்கான இலவச விநியோகம் போன்றவை உள்ளடங்குகின்றன. இந்த பெறுமதிசேர் சேவைகள் ஒட்டுமொத்த யாழ் குடாநாட்டிற்கும் வழங்கப்படுவதுடன், அனைத்து திருமணங்களுக்கான 10% அறிமுகக் கழிவு வெகுமதியும் இதில் உள்ளடங்குகின்றது.

சர்வதேச புகழ்பெற்ற மலர்சார் தீர்வுகள் வழங்குனராக திகழ்கின்ற லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்தின் புதிதாக திறக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கிளையானது, கொழும்பு, நாவல, நீர்கொழும்பு, கண்டி மற்றும் பாணந்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள லஸ்ஸன ஃபுளோராவின் பரந்துபட்ட கிளை வலையமைப்புடன் இணைந்து கொள்கின்றது. பருவகால வெகுமதிகள் மற்றும் விற்பனை ஊக்குவிப்பு விலைக் கழிவுகள் உள்ளடங்கலாக பல்வேறு சேவைகளை லஸ்ஸன ஃபுளோரா நிறுவனம் வழங்கி வருகின்றது.

அதுமட்டுமன்றி, வாடிக்கையாளர்கள் ஒன்லைன் மூலமாகவும், 011 200 1122 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் அதேபோன்று www.lassanaflora.com என்ற இணையத்தளம் ஊடாவும் தமக்கு வேண்டியவற்றை ஓடர் செய்து கொள்ளக் கூடிய வசதியும் வழங்கப்படுகின்றது.

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக லஸ்ஸன ஃபுளோரா நிறுவனமானது விடாமுயற்சியுடன் போராடி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. முன்னொருபோதும் மேற்கொள்ளப்பட்டிராத வர்த்தக முன்முயற்சிகளை முன்னெடுத்துள்ள லஸ்ஸன ஃபுளோரா, இலங்கையில் உள்ள ஒரேயொரு ISO9001-2008 சான்றழிக்கப்பட்ட மலர் கம்பனியாகவும், தென்னாசியாவில் இச்சான்றிதழைப் பெற்றுக் கொண்ட முதலாவது நிறுவனமாகவும் திகழ்கின்றது. LMD சஞ்சிகையினால் மிகச் சிறந்த 100 வர்த்தகக் குறியீடுகளுள் ஒன்றாக லஸ்ஸன ஃபுளோரா பட்டியலிப்பட்டுள்ளமையானது கடந்த பல வருடங்களாக நிறுவனம் பெற்றுக் கொண்ட நம்பிக்கை மற்றும் அங்கீகாரத்தை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதாக காணப்படுகின்றது.