Back to Top

இராணுவ விமான விபத்து - 100 பேர் பலி

இராணுவ விமான விபத்து - 100 பேர் பலி

April 11, 2018  02:50 pm

Bookmark and Share
அல்ஜீரிய தலைநகர் அல்ஜீரிஸ்ஸை அடுத்து உள்ள பவ்பரிக் விமான நிலையம் அருகே இராணுவ விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் படுகாயம் அடைந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்திற்குள்ளான இராணுவ விமானத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக அந்நாட்டு தொலைக்காட்சி நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது.

விபத்து குறித்தும், விபத்திற்கான காரணம் குறித்தும், அதில் பயணம் செய்தவர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.