Back to Top

ACEF குளோபல் விருதில் தெரிவு செய்யப்பட்டுள்ள கொமர்ஷல் வங்கி

ACEF குளோபல் விருதில் தெரிவு செய்யப்பட்டுள்ள கொமர்ஷல் வங்கி

April 11, 2018  03:08 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கியின் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்த ஆக்கபூர்வமான புதிய பாணியிலான சமூக ஊடக பாவனை ´2018ம் ஆண்டுக்கான சமூக ஊடக வர்த்த முத்திரை´ என்ற கீர்த்திமிக்க விருதை வங்கிக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. ஏஸியன் கஸ்டமர் என்கேஜ்மன்ட் போரம் (ACEF) இந்த விருதை வழங்கியுள்ளது.

இந்த விஷேட வகைப்படுத்தலின் கீழான விருதானது ஏப்பிரல் மாதம் ஏழாம் திகதி ACEF இன் மும்பாயில் இடம்பெற்ற ஏழாவது குளோபல் கஸ்டமர் என்கேஜ்மன்ட் போரம் விழாவில் வழங்கப்பட்டுள்ளது. வித்தியாசமான பல்வேறு வகை விருதுகளை வெல்ல உலகம் முழுவதிலும் இருந்து 620க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்திருந்தன. கொமர்ஷல் வங்கி ஒரெயொரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பித்திருந்த நிலையில் அதற்கு இந்த விருது கிடைத்துள்ளது.

பேஸ்புக், வைபர், இன்ஸ்டர்கிராம், யுடியுப் மற்றும் லிங்டின் ஆகிய ஐந்து பிரதான சமூக ஊடகங்கள் வழியாக தற்போதுள்ள வாடிக்கையாளர்களோடு பெரும்பாலும் வர்த்தக ரீதியற்ற அனுகுமுறையை வெற்றிகரமாகக் கையாண்டமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

´இந்த விருது கிடைத்தமை எமக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. காரணம் மாறிவரும் மனோபாவங்களுக்கு ஏற்ப எம்மால் ஆக்கபூர்வமான விதத்தில் செயற்பட முடியும் என்பதை இது புலப்படுத்தி உள்ளது´ என்று கூறினார் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெகன் துரைரட்ணம். ´வங்கிகளை பழமையானதாகவும் பாரம்பரியமானதாகவுமே தொடர்ந்து நோக்குகின்றனர். ஆனால் சமூக ஊடகம் என்ற விடயம் நாம் விரைவாக அவற்றைக் கற்று பயன்படுத்தி குறிப்பாக அடுத்த தலைமுறையை சென்றடையத் தயாராக இருக்கின்றோம் என்பதை உணர்த்தி உள்ளது´ என்று அவர் மேலும் கூறினார்.

பாரம்பரிய ஊடகத்தை விட இது செய்திகளை அனுப்பும் அனுகுமுறையில் சுமைகளை குறைக்கின்றது. குறிப்பாக இளைய தலைமுறையை சென்றடையும் வகையில் கொமர்ஷல் வங்கி உணர்வுபூர்வமான கருப் பொருள்களோடு உன்னதமான முறையில் சமூக ஊடகங்களைக் கையாண்டு வருகின்றது. குறிப்பாக பேஸ்புக்கில் தனது உற்பத்திகளையும் சேவைகளையும் ஊக்குவிப்பதற்கு பதிலாக இருவழித் தொடர்பாடல் மூலம் இரண்டறக் கலக்கும் வாய்ப்பினை வங்கி தனது பேஸ்புக் விசிறிகளுக்கு வழங்கி உள்ளது.

அவர்களது வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடிய சம்பந்தப்பட்ட பயன்மிக்க ஊக்;கவலு கொண்ட தகவல்களை வங்கி பரிமாறி வருகின்றது. வங்கி தெரிவித்துள்ள தகவலின் படி கொமர்ஷல் வங்கியின் பேஸ்புக் பக்கம் தான் இலங்கையில் உள்ள வங்கி ஒன்றைப் பொருத்தமட்டில் ஆகக் கூடுதலான செயற்பாடுகள் கொண்ட பக்கமாகக் காணப்படுகின்றது.

வங்கியின் பேஸ்புக் பக்கத்தில் மிகவும் கவனத்தை ஈர்த்த விடயங்களாக பிக் மெச் கீதம், பிக் மெச் வாக்கெடுப்பு, மிஸ் யுனிவர்ஸ் மெஸேஜ் போட்டி, கிறேட் லேடீஸ் வீடியோ, சுப நேரங்களுக்கான கவுண்ட் டவுன், சமய வழிபாடுகளின் அசல் தன்மை, கழிவு மீள் சுற்று பிரசாரம், அழகான இலங்கையை கட்டி எழுப்புவோம் பிரசாரம், அற்புதமான இலங்கை, அன்றும் இன்றும் போட்டோ சவால், வார அன்பு, காதலர் தின பிரசாரம், ஐ போன் றெட் கிவ் எவே, டின்னர் வவுச்சர் கிவ் எவே என்பனவற்றை குறிப்பிடலாம்.

இவ்வாறான பதிவுகளும் செயற்பாடுகளும் 2017ம் ஆண்டில் கொமர்ஷல் வங்கியின் பேஸ்புக் பக்கத்தில் அளப்பரிய ஈர்ப்பை உருவாக்கின. 42 மில்லியனுக்கும் அதிகமான ஈர்க்கக் கூடிய பதிவுகள்; இவ்வாறு உருவாக்கப்பட்டன. 1.7 மில்லியன் விடியோ பார்வைகள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான விருப்புக்களும் ஏனைய பதில்களும், பக்கத்துக்கான மூன்று லட்சத்துக்கும் அதிகமான விருப்புக்கள் என்பன இங்கே குறிப்பிடத்தக்கவை.

போட்டித்தன்மை கொண்ட வங்கிகளுடனான ஒப்பீட்டிலும் கொமர்ஷல் வங்கியின் பேஸ்புக் பக்கமே அதிக செயற்பாடுகள் கொண்டதாகப் பதிவாகி உள்ளது. இவற்றுள் பல ஏற்கனவே நீண்ட காலம் இருக்கின்ற பக்கங்களாகவும் அதிக விருப்புக்களைக் கொண்டிருந்த பக்கங்களாகவும் காணப்பட்டன. 2017 பெப்ரவரியில் வங்கியின் வைபர் பக்கம் உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டு கடைசியில் 143927 பின்பற்றல்களை அது கொண்டுள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளின் எல்லா வைபர் பக்கங்களையும் விட இதுவே அதிக பின்பற்றல்களைக் கொண்ட பக்கமாகக் காணப்படுகின்றது. உத்தியோகப்பூர்வ யுடியுப் அலைவரிசை 2017 டிசம்பர் 31ல் 257941 பார்வையிடல் நிமிடங்களைப் பதிவு செய்துள்ளது.

ACEF இடமிருந்து தொடர்ந்து இரண்டாவது வருடமாக கொமர்ஷல் வங்கி ஒரு விருதை வென்றுள்ளது. வங்கியின், பாஸ்புக் பிரயோகம் வாடிக்கையாளர்களால் மிகவும் கவரப்பட்ட நடமாடும் தொலைபேசி பிரயோகத்துக்கான தங்க விருதை 2017ல் இடம்பெற்ற ஆறாவது விருது வழங்கல் நிகழ்வில் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து ஏழு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 261 கிளைகளுடனும்ரூபவ் 757 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது இலங்கையின் தலைசிறந்த வங்கிரூபவ் மிக உறுதியான வங்கி, மிக கௌரவமான வங்கி என பல விருதுகளை உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கடந்த பல ஆண்டுகளில் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2016ல் மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. முழு அளவிலான தனது சொந்த பணப்பரிமாற்ற சேவைகளை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.