Back to Top

அதியுயர் புள்ளிகள் பெற்ற பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை சமர்ப்பிக்கும் SLIIT

அதியுயர் புள்ளிகள் பெற்ற பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை சமர்ப்பிக்கும் SLIIT

April 12, 2018  09:14 am

Bookmark and Share
SLIIT கல்வியகத்தின் வணிக பிரிவானது அண்மையில் வணிக முகாமைத்துவத்திற்கான அதிமேண்தகு விருதை தம்வசம் கொண்டது. சிறந்த கல்விமானிற்கான SLIIT யின் தங்க விருதை பெற்றுக்கொண்ட துலாரா அசிந்தன அத்துக்கொரல CIMA அனுசரனையின் கீழ் வழங்கப்பட்ட நிதி மற்றும் கணிக்கியல் விசேடத்துவத்திற்கான சிறந்த செயற்பாட்டாளர் விருதையும் பெற்றுக் கொண்டார். இலங்கை வங்கியின் அனுசரணையின் கீழ் வழங்கப்பட்ட நிதி மற்றும் கணிக்கியல் விசேடத்துவத்திற்கான SLIIT மெரிட் விருதை இசுறு சமத்கா பெர்னான்டோ பெற்றுக்கொண்டார்.

Human Capital Management விசேடத்துவத்திற்கான சிறந்த செயற்பாட்டாளர் விருதை வெல்லன லியனகே அமந்த உதானி சுவீகரித்துக் கொண்டார். இவ்விருதிற்கு லங்காபெல் அனுசரணை வழங்கியது. விசேடத்துவத்திற்கான சிறந்த செயற்பாட்டாளர் விருதினை வீரக்கொடி காயத்ரி கன்சுமலி த சில்வா பெற்கொண்டதோடு எப்பிக் லங்கா பிரைவட் லிமிட்டெட் இதன் அனுசரணையாளராய் திகழ்ந்தது.

ஹெமாஸ் மெனுஃபெக்சரிங் பிரைவட் லிமிடெட் அனுசரனையின் கீழ் வழங்கப்பட்ட விற்பனை முகாமைத்துவ விசேடத்துவத்திற்கான சிறந்த செயற்பாட்டாளர் விருதினை கல்பனா மதுஷானி பெர்ணான்டோவும், QM – சிறந்த செயற்பாட்டாளர் விருதை அயேஷா நிர்மாணி அபேகோனும் பெற்றுக் கொண்டனர்.

SLIIT முகாமைத்துவ கல்வியகம் Business Administration Special Honours இன் கீழ் மொத்தமாக 115 இளமாணி பட்டங்களை சுவீகரித்துள்ளதோடு, அவற்றில் 41 விருதுகள் நிதி மற்றும் கணக்கியல் துறை சார்ந்தும், 17 விருதுகள் Human Capital Management பிரிவின் கீழும், 13 விருதுகள் Management Information Systems பிரிவின் கீழும், Quality Management பிரிவில் 6 விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பட்டங்கள் பெற்ற அனைவரையும் வாழ்த்திய SLIIT வணிக கல்வியகத்தின் அதிபர் பேராசிரியர். சமந்த தெலிஜ்ஜகொட மேலும், ´ Business Administration பிரிவில் சிறந்த தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அதிமேண்தகு பட்டங்களை வழங்குவதையிட்டு நாம் மிகவும் பெருமைக் கொள்கிறோம். மேலும் சிறந்த செயற்பாட்டாளர் மற்றும் மெரிட் விருதுகளை பெற்ற அனைவருக்கும் எம் சிறப்பு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு SLIIT கல்வியகத்தினூடாக அவர்கள் அதியுயர் பலன் பெற்றுள்ளனர் என்பது இதனூடாக முற்றிலும் நிறூபனமாகியுள்ளது.´ எனத் தெரிவித்தார்.