Back to Top

மழைக்கு 12 பேர் பலி - பலர் வைத்தியசாலையில்...

மழைக்கு 12 பேர் பலி - பலர் வைத்தியசாலையில்...

April 12, 2018  09:56 am

Bookmark and Share
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மற்றும் பரத்பூரில் நேற்றிரவு திடீரென இடி மின்னலுடன் கனமைழை பெய்தது.

திடீரென பெய்ய கன மழையால் சாலையெங்கும் மழை வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடியது.

இந்த கனமழையால் தோல்பூரில் 7 பேரும், பரத்பூரில் 5 பேரும் உயிரிழந்தனர்.

மழை வெள்ளத்தால் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ஆக்ரா - தோல்பூர் இடையிலான ரெயில் போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.