Back to Top

680 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக நாளை மக்களிடம் (படங்கள்)

680 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக நாளை மக்களிடம் (படங்கள்)

April 12, 2018  12:15 pm

Bookmark and Share
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட 680 ஏக்கர் நிலம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக நாளை 13 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இக் காணி கையளிப்பு நிகழ்வுக்காக மயிலிட்டி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நாளை காலை 10 மணிக்கு வலிகாமம் வடக்கில் 3 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 680 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில் இந்நிகழ்விற்கு இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Most Viewed