Back to Top

விடுமுறையை வினோதமாக கொண்டாடியவர் பலி

விடுமுறையை வினோதமாக கொண்டாடியவர் பலி

April 16, 2018  02:27 pm

Bookmark and Share
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காப்பட்டுண கடல் பகுதியில் உறவினர்கள், நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதிடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) விடுமுறை தினமென்பதால் குறித்த நபர் லங்காப்பட்டுண கடலுக்குச் சென்று நீராடி பொழுதை போக்கிக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதே வேளை பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் இவர் கடலில் நீராடும் போது அதிக மது போதையில் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

நேற்று (15) மாலை லங்காப்பட்டுண கடற்படையினர் சடலத்தை மீட்டு சேருநுவர பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். வைத்திய சாலையில் இன்று (16) காலை சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பாரிசோதனைக்கு சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறும் சேருநுவர பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(திருகோணமலை நிருபர் பாறுக்)

Most Viewed