Back to Top

ஐபிஎல் - சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தாவுக்கு வெற்றி

ஐபிஎல் - சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தாவுக்கு வெற்றி

April 17, 2018  09:23 am

Bookmark and Share
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர்.

சுனில் நரேன் ஒரு ஓட்டத்துடனும், லின் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய உத்தப்பா 35 ஓட்டங்கள், தினேஷ் கார்த்திக் 19 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 35 பந்தில் 59 ஓட்டங்களும், ஆந்ரோ ரஸ்ஸெல் 12 பந்தில் 41 ஓட்டங்களும் குவித்தனர். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்க்கு 200 ஓட்டங்கள் குவித்தது.

டெல்லி அணி சார்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், கிறிஸ் மாரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, 201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கவுதம் கம்பீர், ஜேசன் ராய் ஆகியோர் களம் இறங்கினர்.

கொல்கத்தா அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி டெல்லி அணி திணறியது. ரிஷப் பந்த், மேக்ஸ்வெல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். பந்த் 26 பந்தில் 43 ஓட்டங்களும், டி வில்லியர்ஸ் 22 பந்தில் 47 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்களும் விரைவில் ஆட்டமிழந்தனர்.

இதனால் டெல்லி அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

Most Viewed