
ICTA தலைவராக பேராசிரியர் ரொஹான் சமராஜீவ
April 17, 2018 04:27 pm
தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கை தயாரிப்பு மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்களை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய பணிப்பாளர் சபையின் தலைவராக பேராசிரியர் ரொஹான் சமராஜீவ நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் ரொஹான் சமராஜீவ தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக இதற்கு முன்னர் பணியாற்றியுள்ளார்.