Back to Top

மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட நபர் (படங்கள்)

மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட நபர் (படங்கள்)

May 9, 2018  11:17 am

Bookmark and Share
ரன்படகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்விட, கிரிபத்கல்ல பகுதியில் ஒருவர் மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவற்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய இரட்டை ஆண் குழந்தைகளும் மற்றும் 10 வயதுடைய ஒரு பெண் பிள்ளையும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரன்படகல்ல நீதவான் ரமல் அகோக முன்னிலையில் நேற்று (08) விசாரணைகள் இடமபெற்றதுடன் சடலங்களை நீதிமன்ற வைத்திய பரிசோதனைகளுக்கு அனுப்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் மே மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.