Back to Top

மாகாண சபை உறுப்பினருக்கு பிணை

மாகாண சபை உறுப்பினருக்கு பிணை

May 9, 2018  05:07 pm

Bookmark and Share
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி சக்திவேலுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஹட்டன் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்குகள் மூன்றுக்கு ஆஜராகாத காரணத்தால் இவருக்கு எதிராக நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இதற்கமைவாக இன்று (09) சட்டதரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்திற்கு ஆஜராகிய இ.தொ.காவின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலுக்கு நீதிமன்றம் ஐயாயிரம் ரூபாய் ரொக்க பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி டி.சரவணராஜா இந்த உத்திரவை பிறப்பித்துள்ளார்.

ஹட்டன் நகரில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இவருக்கு எதிராக பிடியானை பிறப்பத்திருந்தமை குறிப்பிடதக்கது.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)