Back to Top

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் நேர மாற்றம்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் நேர மாற்றம்

May 10, 2018  09:27 am

Bookmark and Share
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று மும்பையில் வருகிற 22 ஆம் திகதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 23 ஆம் திகதியும், 2 வது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 25 ஆம் திகதியும், இறுதிப்போட்டி மும்பையில் 27 ஆம் திகதியும் நடைபெறுகிறது.

முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக ராஜீவ் சுக்லா ஒரு டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று வருவதற்கு ரசிகர்களின் ஆதரவு தான் முக்கிய காரணம். மைதானம் வந்தும், வீட்டில் டி.வி.யிலும் ரசிகர்கள் ஐ.பி.எல். போட்டியை ரசித்து வருகிறார்கள். ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மைதானத்துக்கு வரும் பார்வையாளர்கள் மட்டுமின்றி வீட்டில் டி.வி.யில் பார்க்கும் அலுவலகம் செல்வோர் மற்றும் மாணவர்கள் அடுத்த நாள் காலையில் தங்களது பணிகளை கவனிக்க வேண்டியது உள்ளது. எனவே ஒரு மணி நேரம் முன்னதாக தொடங்கினால் அவர்கள் அடுத்த நாள் தங்களது பணிகளை கவனிக்க எளிதாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Most Viewed