Back to Top

 சென்னையை சமாளிக்குமா ராஜஸ்தான்?

சென்னையை சமாளிக்குமா ராஜஸ்தான்?

May 11, 2018  09:57 am

Bookmark and Share
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு நடைபெறவுள்ள 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.

டோனி தலைமையிலான சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. முந்தைய போட்டியில் பெங்களூருவை 127 ஓட்டங்களில் கட்டுப்படுத்தி அசத்திய சென்னை அணி வெற்றிப் பயணத்தை தொடருவதில் தீவிரம் காட்டும்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி கிட்டினால் சென்னை அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விடும்.

டோனியின் இறுதி கட்ட ஷாட்டுகள் ரசிகர்களை சிலிர்க்க வைக்கின்றன. இவர்களின் ஆதிக்கம் நீடித்தால், எதிரணியால் சமாளிப்பது கடினம் தான். தசைப்பிடிப்பால் கடந்த 12 நாட்களாக ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டதை காண முடிந்தது. அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இவ்விரு அணிகளும் புனேயில் சந்தித்த ஆட்டத்தில் சென்னை அணி ஷேன் வாட்சனின் சதத்தின் உதவியுடன் ராஜஸ்தானை 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது நினைவு கூரத்தக்கது.

10 போட்டிகளில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வி என்று 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள ராஜஸ்தான் அணி எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

அதாவது இந்த போட்டி அவர்களுக்கு வாழ்வா? சாவா? மோதல் ஆகும்.

ராஜஸ்தான் வீரர்கள் வழக்கமாக ஊதா நிற உடை அணிந்து விளையாடுவார்கள். இந்த ஆட்டத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிரத்யேகமாக இளஞ்சிவப்பு (பிங்க்) சீருடை அணிந்து விளையாட இருக்கிறார்கள்.

ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 12-ல் சென்னையும், 6-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.