Back to Top

மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு நாட்டிலிருந்து வௌியேற தடை

மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு நாட்டிலிருந்து வௌியேற தடை

May 12, 2018  10:13 am

Bookmark and Share
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அந்த நாட்டை விட்டு வௌியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

விடுமுறையை கழிப்பதற்காக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி வௌிநாடு செல்ல இருந்த நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மலேசிய பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மகாதிர் முகமது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நஜிப் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் ஒரு முழுமையான விசாரணை நடக்கும் என பிரதமர் மகாதீர் மொஹமத் கூறியிருந்தார்.

நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என குடியேற்றத் துறை அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக மகாதீர் ட்வீட் செய்துள்ளார்.

Most Viewed