Back to Top

கேரள கஞ்சா 15 கட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

கேரள கஞ்சா 15 கட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

May 14, 2018  12:09 pm

Bookmark and Share
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கேரள கஞ்சா 15 கட்டுகளை வைத்திருந்த ஒருவரை நேற்று (13) மாலை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸர் தெரிவிக்கின்றனர்.

யூனிட் ஏழு, முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கஞ்சா வியாபாரி எனவும் விற்பனைக்காக கேரள கஞ்சா 15 கட்டுகளை கல்மெட்டியாவ பகுதியில் வைத்துக்கொண்டு நின்ற வேளையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு இன்று (14) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(திருகோணமலை நிருபர் பாறுக்)