
ஆற்றில் அள்ளுண்டு வந்த மூதாட்டியை உயிருடன் மீட்ட மக்கள்
May 15, 2018 03:50 pm
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஆற்றில் அள்ளுண்டு வந்த மூதாட்டி ஒருவரை ஹட்டன் பொலிஸாரும் வனராஜா தோட்டபகுதி மக்களும் இணைந்து உயிருடன் மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மூதாட்டியை டிக்கோயா வனராஜா ஸ்ரீ சித்தி விநாகர் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த மூதாட்டி தொடர்பில் இதுவரையில் எவ்வித அடையாளங்களும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ஆற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தார அல்லது வேறு நபரால் தள்ளிவிட பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(மலையக நிருபர் சதீஸ்குமார்)