Back to Top

இலங்கையிலுள்ள இளைஞர்கள் மற்றும தொழின்முனைவோருக்கு Facebook வலுவூட்டவுள்ளது

இலங்கையிலுள்ள இளைஞர்கள் மற்றும தொழின்முனைவோருக்கு Facebook வலுவூட்டவுள்ளது

May 15, 2018  04:22 pm

Bookmark and Share
Facebook இன் உலகளாவிய Boost Your Business (உங்கள் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துங்ள் ) நிகழ்ச்சித்திட்டமானது தற்போது இலங்கையிலுள்ள இளைஞர்கள் மற்றும் தொழின்முனைவோருக்கு கிடைக்கின்றது. நாட்டிலுள்ள சிறிய வணிக உரிமையாளர்களிடம் உள்ள சாத்தியங்களை உணர்ந்து, அவர்களை அங்கீகரித்துள்ள Facebook ஆனது, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப முகவர் நிறுவனத்துடன் (Information and Communication Technology Agency (ICTA)) இனைந்து, 2018ம் ஆண்டின் இறுதிக்குள் நாடளாவிய ரீதியிலுள்ள 10,000 சிறு வணிக உரிமையாளர்களுக்கு வேண்டிய பயிற்சியளிக்கவுள்ளது. இந்த பயிற்சி நடவடிக்கைகளின் முதற்கட்டமாக, கொழும்பு, காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முதன்மை Boost Your Business பயிற்சிப்பட்டறையானது, கொழும்பில் மே 16ம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிப்பட்டறையில், தமது வணிக நடவடிக்கைகளை Facebook இன உதவியுடன், ஒன்லைனில் எவ்வாறு வளர்த்தல் மற்றும் இலாபமீட்டல் என்பது குறித்து தொழின்முயற்சியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். இலவசமாக தமது டிஜிடல் இருப்பினை எவ்வாnறு கட்டமைத்துக்கொள்தல் மற்றும் மொபைல் ஊடாக பொருளாதார மேம்பாட்டினை எவ்வாறு ஊக்குவித்தல் என்பது குறித்து, பங்கேற்பாளர்களுக்கு கற்றுத்தரவுள்ள இந்த பயிற்சிப்பட்டறையானது, குறித்த வழிமுறைகள் ஊடாக எவ்வாறு சந்தை அணுக்கத்தினை பெற்றவாறு, தமது வணிக நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல் என்பதை கற்றுத்தருவதிலும் கவனம் செலுத்தும்.

இந்த பங்குடமை குறித்து கருத்து தெரிவித்த ICTA தலைவர், கலாநிதி. ரொஹான் சமரஜீவ அவர்கள் ´வலுவான மற்றும் தீவிரமான செயற்திறன் மிகுந்த பொருளாதாரத்தினை அளிக்கும் டிஜிடல் உள்ளடக்கம் நிறைந்த நாட்டினை உருவாக்குவதே எமது இலக்காகும். Facebook இன் பிரபலம் மற்றும் ஆதரவு ஆகியவற்றுடன்,எமது தகவல் தொடர்பாடல் முனைப்புகளை நாம் துரிதப்படுத்தியவாறு, பொருளாதார மேம்பாட்டுக்கு துரித ஊக்குவிப்பை அளிக்கும் ICTA இன் நோக்கங்களை நிறைவேற்ற முனைகின்றோம்´ என்றார்.

இந்த நிகழ்ச்சித்திட்டம் குறித்து விரிவாக தெரிவித்த இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான - Facebook பொதுக் கொள்கை பணிப்பாளர் அங்க்கி தாஸ் அவர்கள் ´இலங்கை போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு, சிறிய மற்றும் நடுத்தர அளவு வர்த்தக முனைப்புகள், நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கு அத்தியாவசியமாக விளங்குகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டமானது, உள்நாட்டு வணிக முனைவோர் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகளை, பாரம்பரிய ழககடiநெ பொருளாதாரம் அளிக்கும் நன்மைகளை விட, மேலதிக அனுகூலங்களை அளிக்கும் இணைய இருப்பினை அறிமுகப்படுத்தியபடி, தேவையான பயிற்சிகள் மற்றும் வளம் ஆகியவற்றினை அளித்தவாறு தொழின்முனைவோருக்கு ஊக்கமளிக்கும். நாம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நிகர பங்களிப்பாளராக விளங்குவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு´ என்றார்.

‘BoostYourBusiness’ முனைப்பானது, டிஜிடல் அறிவாற்றலை மேம்படுத்தலை நோக்காக கொண்ட ICTA இன் ஸ்மார்ட் சமூக வட்ட முனைப்புகளுக்கும் (SMART Social Circle initiative), தார்மீக மற்றும் பொறுப்புணர்வுமிக்க சமூக ஊடக பாவனையினை உருவாக்குவதற்கும், மேலும் பெறுமதி சேர்க்கும். ICTA உடன் இணைந்து செயற்படவுள்ள Facebook ஆனது, ஸ்மார்ட் சமூக வட்ட முனைப்பின் கீழ், பிரஜைகளுக்கான ஒருங்கிணைந்த தகவல் பகிர்தல் தளத்தினை உருவாக்குவதற்கான வினைத்திறன்மிகு திட்டம் ஒன்றினை மேம்படுத்துவதற்கும் உதவும். அதுமாத்திரமன்றி ஸ்மார்ட் சமூக வட்ட முனைப்புகளுக்கான மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பாளர்களாக செயற்படும் பணியாளர்களுக்கும், சமூகம் சார்ந்த நிலைத்தகவல்களை பகிர்தலுக்கான Facebook கருவிகளை உபயோகித்தல் தொடர்பிலான பயிற்சிகளையும் Facebook வழங்கும்.

வர்த்தக முனைப்புகளை கண்டறிதல் மற்றும் இணைந்து கொள்தல் செயற்பாடுகளுக்காக மக்கள் இணையத்தளம் மற்றும் மொபைல் தொலைபேசிகளை அணுகுதலை அதிகரித்துள்ள சமகாலத்தில், சிறிய வர்த்தக முனைப்புகள் தமக்கான இணைய இருப்பினை கொண்டிருத்தல் அத்தியாவசியமாகின்றது. வாடிக்கையாளர்களை கவரும் ஆற்றலின் ஊடாகவே, சிறிய வர்த்தக முனைப்புகள் வெற்றிபெறுதலும் தோல்வியடைதலும் அடங்கியுள்ளது. எனினும் மட்டுப்படுத்தப்பட்ட நேரம் மற்றும் வளங்கள் காரணமாக, சிறிய வணிக முனைப்புகளுக்கு இந்த செயற்பாடு கடினமானதாக விளங்குகின்றது. Facebook Page கள் இலவசமாக கிடைப்பதாலும், இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளமையாலும், மொபைல் ஊடாகவே அவற்றினை செயற்படுத்தக்கூடிய வசதியினை கொண்டுள்ளமையாலும், உலகளாவிய ரீதியில் 60 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தக முனைப்புகள் Facebook Page களை உபயோகிக்கின்றன. தனிப்பட்ட முறையில் எவ்வாறு உபயோகித்தல், Facebook Page இனை கட்டமைத்தலானது, Facebook Page இனை கட்டமைப்பதனை போலவே இலகுவானது, Facebook இல் சாத்தியமான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் என்பன போன்ற பல்வேறு காரணங்களால், சிறிய வணிக முனைப்பு உரிமையாளர்கள், Facebook இனை தமக்கு பொருத்தமாக சமூக ஊடகமாக கருதுகின்றனர்.

Boost Your Business பயிற்சியானது, அரசாங்கம் மற்றும் காலி, கண்டி, யாழ்ப்பாணம் போன்ற தூரப்பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கையின் அனைத்து பிராந்தியங்களையும் ஒன்றிணைத்து, தகவல்களை பகிர்ந்து கொள்தல் மற்றும் ஒருங்கிணைந்து செயலாற்றுதலை மேம்படுத்தல் போன்ற விடயங்களை வளர்ச்சியுறச்செய்யும். அத்துடன் இதன் மூலம் அதிகபட்ச ஊடாடல் மற்றும் தகவல் பகிர்வினையும் மேற்கொள்ளலாம்.

Most Viewed