Back to Top

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தில் அரசியல் அழுத்தங்கள் இல்லை

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தில் அரசியல் அழுத்தங்கள் இல்லை

May 16, 2018  10:47 am

Bookmark and Share
​பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் அரசியல்வாதிகள் சிலர் அழுத்தம் கொடுத்தாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தான் நிராகரிப்பதாக பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்றம் தொடர்பில் தெளிவான வழிமுறை ஒன்றை தற்போது முன்னெடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்ய தனியான ஒரு குழுவை நியமித்து அவர்களின் மூலம் பெறப்படும் அறிக்ககைகளை கொண்டு யாருக்கும் அநீதி ஏற்படாத விதத்தில் பொலிஸ் இடமாற்றங்களை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் பல்வேறு விதத்தில் அழுத்தங்கள் கொடுப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தான் முழுமையாக நிராகரிப்பதாகவும் பொலிஸில் உள்ள அனைத்து குறைப்பாடுகளையும் விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.