
பஸ் உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பஸ் சங்கம்
May 16, 2018 12:10 pm
இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு கொழும்பு மாவட்ட பஸ் பயணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அந்த சங்கம் இந்த விடயத்தைக் கூறியுள்ளது.
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 6.56% பஸ் கட்டண அதிகரிப்பை தமது சங்கம் ஏற்றுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் கூறுவது போல் நூற்றுக்கு 10% ஆல் அல்லது 20% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதை தமது சங்கம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிப்பது ஒருபோதும் நியாயமானதல்ல என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.
இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொள்ள தீர்மானித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமது சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்கள் கோருவது போன்று கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.