Back to Top

INSEE சங்ஸ்தா சீமெந்தினால் நிலைத்திருக்கும் வெசாக் தோரணம் நிர்மாணம்

INSEE சங்ஸ்தா சீமெந்தினால் நிலைத்திருக்கும் வெசாக் தோரணம் நிர்மாணம்

May 16, 2018  01:02 pm

Bookmark and Share
உலகில் முதன்முறையாக வெசாக் தோரணமொன்று சீமெந்தினால் இம்முறை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. கடவத்த, ரண்முதுகல பகுதியில் பிரத்தியேகமான முறையில் இந்த தோரணம் நிலையானதாக அமைக்கப்பட்டிருந்தது. இதனை பெருமளவானோர் கண்டுகளித்திருந்தனர். இந்த தோரணத்தை பிரதீப் குமார தனது நண்பரான டபிள்யு. சிரிபால உடன் இணைந்து அமைத்திருந்தார்.

பிரதீப், மேசன் தொழிலை முன்னெடுத்து வருவதுடன், தனது சிறுபராயம் முதல் புத்தாக்கமான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். இம்முறை வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சீமெந்தினால் நீண்ட காலம் நிலைத்திருக்கும் தோரணமொன்றை அமைப்பது பற்றி அவர் சிந்தித்தார். இதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதற்காக தன்னை தயார்ப்படுத்தியிருந்தார். சுமார் மூன்று மாதங்கள் கடின உழைப்பைத் தொடர்ந்து, 45 அடி உயரமான தோரணத்தை அவர் நிர்மணித்திருந்தார்.

இந்த நிர்மாண செயற்பாடுகளுக்காக சுமார் 50 பொதிகள் INSEE சங்ஸ்தா சீமெந்தை பிரதீப் பயன்படுத்தியிருந்தார், தினசரி தமது நிர்மாண செயற்பாடுகளின் போது சங்ஸ்தா பிளென்டட் (அரைத்த கலவை) சீமெந்தின் தரம் மறறு; ம் பிரத்தியேக உள்ளம்சங்கள் பற்றி அவர் அறிந்திருந்தமை காரணமாக அதை தெரிவு செய்ய அவர் தீர்மானித்தார். தோரணம் பூர்த்தியை அணுகிய போது, INSEEநிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, அவரின் இந்த புத்தாக்கமான செயற்பாட்டுக்கு உதவிகளை வழங்க நிறுவனம் முன்வருமா என கோரியிருந்தார். INSEE சீமெந்து நிறுவனத்தின் நிர்வாகம் இந்த திட்டம் தொடர்பில் அறிந்து கொள்ள ஆர்வம் செலுத்தியிருந்ததுடன், அவரின் முயற்சி தொடர்பில் அக்கறை காண்பித்தது. நிறுவனத்திடமிருந்து இந்த அயராத உழைப்பு, அதீத ஈடுபாடு, காலம் ஆகியவற்றுக்கு பங்களிப்பு கிடைத்திருந்தது.

Siam City சீமெந்து (லங்கா) நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி சுஜீவ பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், ´சங்ஸ்தாவினால் 5 பிரதான அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன. இதில், உயர் வலிமை, நீடித்த உழைப்பு, பணியாற்றுவதற்கு இலகுவான தன்மை, சிறந்த பூர்த்தி மற்றும் கலவையை பெற்றுக் கொள்ள குறைந்த நீர் தேவைப்பாடு போன்றன அடங்குகின்றன. அரைத்த சீமெந்து எனும் வகையில், சங்ஸ்தா சீமெந்தினால் இலங்கையின் நிர்மாண செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோருக்கு கல்சியம் காபனேற்றுடன் (CaC03) கலந்த சீமெந்தின் அனுகூலத்தை பெற்றுக்கொள்ள முடிகிறது. கொங்கிறீற் இடும் போது எழக்கூடிய சகல இடைவெளிகளையும் நிவர்த்தி செய்வதாக இது அமைந்துள்ளதுடன், வலிமையானதாக மாற்றுகிறது. அரைக்கப்பட்ட சங்ஸ்தா சீமெந்து என்பது நிலைத்திருக்கக்கூடியது, முக்கியமாக இரும்பு தூண்களினுள் நீர் புகுவதை இது தவிர்க்கிறது என்பதுடன், இரும்பு துருப்பிடிப்பதிலிருந்து பாதுகாக்கிறது.

சங்ஸ்தா சீமெந்து ஒரு பொதியிலிருந்து கலவையை பெறுவதற்கு 25 லீற்றர் நீர் மட்டுமே தேவைப்படுகிறது. சேர்க்கப்பட்ட கல்சியம் காபனேற்று (CaC03) மற்றும் இதர முக்கியமான உள்ளடக்கங்கள் போன்றன கொங்கிறீற் கலவையை பிரயோகிப்பதற்கு இலகுவாக மாற்றியமைக்கிறது. இதனூடாக பிளாஸ்டர் செய்யும் செயற்பாடும் வினைத்திறன் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன், சிறந்த பெறுபேறுகளை வழங்குவதாக அமைந்துள்ளன.´ என்றார். பிரதீப் குமார கருத்துத் தெரிவிக்கையில், ´வெசாக் நிறைவடைந்து சில நாட்களின் பின்னர் பெருமளவான வெசாக் தோரணங்கள் காணாமல் போய்விடும் நிலையில், ஒரு சில அலங்காரங்கள் மட்டுமே அடுத்து வரும் பொசொன் பௌர்ணமி வரை நிலைத்திருக்கும். இந்நிலையில் எமது சீமெந்தினால் அமைக்கப்பட்ட தோரணம், பல வருட காலத்துக்கு நிலைத்திருக்கக்கூடியது. நீண்ட கால அடிப்படையில் செலவீனம் குறைந்த சிறந்த முதலீடாக இது அமைந்துள்ளது. மழை, வெயில் போன்ற சகல காலநிலைக்கும் எவ்வித பாதுகாப்புகளுமின்றி தாக்குப்பிடிக்கக்கூடியதாக அமைந்துள்ளது´ என்றார்.

Most Viewed