Back to Top

அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழகம் SLIIT உடன் இசைவு உடன்படிக்கையில் கைச்சாத்து

அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழகம் SLIIT உடன் இசைவு உடன்படிக்கையில் கைச்சாத்து

May 16, 2018  01:18 pm

Bookmark and Share
உலகளாவிய ரீதியில் காணப்படும் 1.4 சதவீதமான முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின், விக்டோரியாவில் அமைந்துள்ள La Trobe பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. அத்துடன் இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் காணப்படும் சர்வதேச பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் மாணவர்கள் தம்மை தயார்ப்படுத்திக் கொள்ளக்கூடிய உலக அறிவையும் தமது பாடத்திட்டங்களினூடாக La Trobe பல்கலைக்கழகம் வழங்குகிறது.

உலகளாவிய ரீதியில் காணப்படும் பல்கலைக்கழகங்களின் வரிசையில், கடந்த ஆண்டில் La Trobe பல்கலைக்கழகம் சுமார் 200 இடங்கள் முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலகின் சிறந்த 301 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்வதுடன், ஏற்றுக் கொள்ளப்பட்ட சகல மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் வரிசையிலும் முதல் 400 இடங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

La Trobe பல்கலைக்கழகத்தின் உப வேந்தரும் தலைவருமான பேராசிரியர் ஜோன் தேவார் கருத்துத் தெரிவிக்கையில், ´இலங்கைக்கான எமது விஜயம், இலங்கை மற்றும் சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையே நாம் பேணும் உறவை அதிகளவு வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். மாணவர்களின் தொகை அதிகரித்துச் செல்வதையிட்டு, La Trobe பல்கலைக்கழகம் இலங்கையின் முன்னணி கல்வி நிலையங்களில் ஒன்றான SLIIT உடன் இசைவு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக, சர்வதேச அனுபவத்தை மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். La Trobe இல் நாம் மாணவர்களுக்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குகிறோம்´ என்றார்.

இந்த உடன்படிக்கையினூடாக, SLIIT மாணவர்களுக்கு தமது உயர் கல்வியின் இரண்டாவது பகுதியை La Trobe பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்து, La Trobe பல்கலைக்கழகத்திடமிருந்து பட்டத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்கும். இரு கல்வி நிலையங்களையும் சேர்ந்த அதிகாரிகள், கைகோர்த்து செயலாற்றுவதனூடாக, வெவ்வேறு செயற்திட்டங்கள் மற்றும் சிந்தனைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வார்கள்.

பேராசிரியர் தேவார் தொடர்ந்து தெரிவிக்கையில், ´La Trobe பல்கலைக்கழகத்தில் நாம் வர்த்தகம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கல்வி, விஞ்ஞானங்கள், மனித நேயம், சுகாதாரம் போன்ற பிரிவுகளில் கற்கைகளை வழங்குகிறோம். மாணவர்கள் தமது விருப்பத்துக்கமைய பயில வேண்டிய பாடத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும் என நான் அறிவுறுத்துகிறேன். உலகில் இணையக்குற்றங்கள் பெருமளவு அதிகரித்துச் செல்லும் பிரச்சினையாக அமைந்துள்ளது. இணையத்தில் ஊடுருவி மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துச் செல்கின்றமை காரணமாக, திறன் படைத்த இணைய தொழில்நுட்ப நிபுணர்களுக்கான கேள்வியை அதிகரிக்கும். La Trobe இல் நாம் இணைய பாதுகாப்பு தொடர்பான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்புகளை அறிமுகம் செய்துள்ளோம். எமது துறைசார் பங்காளர்களான Optus, CISCO, Symantec, Australia Post பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வர்த்தகம், அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கல் துறைகளில் இணைய இடர்களை எதிர்நோக்கும் இதர நிறுவனங்களின் ஆலோசனைகளின ; பிரகாரம் இந்த கற்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாரிய தரவுகள் மற்றும் தரவு பகுப்பாய்வு தொடர்பான கற்கைகளையும் நாம் அறிமுகம் செய்துள்ளோம்´ என்றார்.

´நாம் 24 பயிலல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளோம், இதில் Lynda.com இன் tutorials> TED Talks, podcasts மற்றும் வீடியோக்கள் போன்றன ஊடான ஈடுபாடுகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பயிலல் செயற்பாடும், சுமார் இரண்டு மணிநேரம் கொண்டவை. இவை ஒவ்வொரு பயலல் செயற்பாடும் Career Ready block ஒன்றை பூர்த்தி செய்து கொள்ள உதவும். நீங்கள் பெற்றுக் கொள்ளும் பெருமளவான டிடழஉமகளினூடாக அதிகளவு வெகுமதிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

La Trobe இல் காணப்படும் மற்றுமொரு புதிய உள்ளம்சமாக, புதிய விளையாட்டு தொகுதியை குறிப்பிடலாம். பல்கலைக்கழகத்தினால் வடக்கு மெல்பேர்ன் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய முதலீடாக இது அமைந்துள்ளதுடன், பிரதான விளையாட்டு நிகழ்வுகளை முன்னெடுப்பது மற்றும் பொழுது போக்கு அம்சங்களை ஊக்குவிப்பது போன்றவற்றை சமூக அங்கத்தவர்களுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

புந்தூராவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் தென் மேற்கு பகுதியில் சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளதுடன், விளையாட்டு, பொழுதுபோக்கு, கற்பித்தல் மற்றும் விளையாட்டு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உகந்ததாக அமைந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் முன்னணி விளையாட்டு நிறுவனங்களின் ஆலோசனைகளின ; பிரகாரம், அலங்கார மற்றும் உட்கட்டமைப்பு திட்டமிடல் செயற்பாடுகள் அனுமதியை பெற்றுள்ளதுடன், இதில் பின்வரும் அம்சங்கள் அடங்கியிருக்கும்:

பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவத்தை பெற்றுக் கொள்ள தேசிய, மாகாண மற்றும் உள்நாட்டு விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வாய்ப்பை வழங்கும்.

பிரத்தியேகமான விளையாட்டுக்களை முன்னெடுப்பதற்கு சிறந்த சூழலாக அமைந்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் பொழுது போக்கு ஆய்வாளர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.

விளையாட்டு தொகுதியின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படுவதுடன், இதில் உதைப்பந்தாட்ட திடல் மற்றும் இயற்கை மேற்தளத்தை கொண்ட AFL oval உடனான சிந்தடிக் கிரிக்கெட் களம் அமைந்திருக்கும் என்பதுடன், இரவு நேரத்தில் விளையாடக்கூடிய ஒளி வசதிகளையும் கொண்டிருக்கும். AFL, கிரிக்கெட் மற்றும் பேஸ்போல் விளையாட்டுக்களுக்கு ஒனப் து மாற்றல் அறைகளுடனான புதிய பார்வையாளர் அரங்கு சகல வசதிகளையும் கொண்டமைந்திருக்கும். வௌ;வேறு கழகங்களுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட பகுதிகளும் இந்த அரங்கில் உள்ளடங்கியிருக்கும். சுமார் 120 பேர் வரை அமர்ந்திருக்கக்கூடிய வசதி இதில் ஏற்படுத்தப்படும். சிந்தடிக் ஆடுகள நிறுவும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதுடன், பார்வையாளர் அரங்கு மற்றும் ழஎயட ஆகியன 2018 இன் பிற்பகுதியில் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புலமைப்பரிசில்கள் அறிவிப்பு
2018 இல் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் கற்கைகளுக்கு சர்வதேச பட்டதாரி மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்கு மொத்த கல்வித்திட்டத்தின் பெறுமதியில் 15 முதல் 25 சதவீதம் வரையான புலமைப்பரிசில்களை வழங்க La Trobe அவுஸ்திரேலியா பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. இந்த புலமைப்பரிசில்கள் தகைமை அடிப்படையில் வழங்கப்படும் என்பதுடன், தமது முன்னைய கல்விசார் நடவடிக்கைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யும் கற்கைகளுக்காக வழங்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் இந்த புலமைப்பரிசில் அமைந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.