Back to Top

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

May 16, 2018  01:25 pm

Bookmark and Share
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 மில்லியன் ரூபா பண மோசடி வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாமையின் காரணமாக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்னர் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டு பின்னர் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.