Back to Top

இலங்கையில் முதற்தடவையாக இன்ஸ்டாகிராம் கலாசார கண்காட்சியினை நடாத்துகின்றது

இலங்கையில் முதற்தடவையாக இன்ஸ்டாகிராம் கலாசார கண்காட்சியினை நடாத்துகின்றது

May 16, 2018  03:26 pm

Bookmark and Share
இன்று முதற்தடவையாக இலங்கையில் கலாசார கண்காட்சி ஒன்றினை இன்ஸ்டாகிராம் (Instagram) நடாத்தியது. தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ பா.உ அவர்கள் மற்றும் ஜனாதிபதி செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஒஸ்டின் பெர்ணாண்டோ ஆகியோரினால் இந்த நிகழ்வு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கையின் துடிப்பும் செழுமையும் நிறைந்த கலாசார பன்முகத்தன்மையினை உலகிற்கு அறியத்தரும் இந்தக் கண்காட்சியில், இலங்கை இன்ஸ்டாகிராம் சமூக அங்கத்தவர்களால் கைப்பற்றப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கதைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

கலதாரி ஹோட்டலில் இடம்பெறும் மாபெரும் Facebook நிகழ்வான ´Boost Your Business´ (உங்கள் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துங்கள்) இன் ஒரு அங்கமாக திகழும் இந்த இன்ஸ்டாகிராம் கலாசார கண்காட்சியானது, இலங்கையிலுள்ள வர்த்தக உரிமையாளர்கள், தமது வர்த்தக நடவடிக்கைகளை Facebook மற்றும் Instagram ஆகியவற்றின் உறுதுணையோடு வளர்ச்சிபெறச்செய்தலை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது.

கண்களைக் கவரும் இயற்கைக் காட்சிகள் முதற்கொண்டு, நாளாந்த வாழ்வில் கருத்தினைக் கவரும் திரைச்சொட்டுகள், மலைக்க வைக்கும் நவீனத்தினை சட்டகத்துக்குள் பொதிந்த சிறுதுளி, விசும்பு வரை விரிந்த பசுமையின் ஓவியங்கள், மாபெரும் இந்து சமுத்திரத்தின் பேரலைகள் என இந்த கண்காட்சியானது, இந்து சமுத்திரத்தின் நித்திலம் என பெருமை பெற்ற இலங்கைத்தீவின் தனித்துவமிக்க வனப்பினை கண்களுக்கு விருந்தாக்கும் நிகழ்வாக திகழ்கின்றது.

இந்த கண்காட்சியில் இலங்கையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆறு தனிநபர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் சமூகத்தினை சேர்ந்த அங்கத்தவர்கள் பங்கேற்றனர். இவர்கள் யாவரும் பன்முக வயது மற்றும் தொழிற்துறை பின்புலங்களைக் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வகையில் உணர்வுகளை அசத்தும் தருணங்களையும், மனதுக்கு நெருக்கமான கதைகளையும் டிஜிடல் படங்களாக கைப்பற்கும் அபிலாஷையை கொண்டுள்ளவர்களாவர். இந்த கண்காட்சியானது, அவர்களின் குரல்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு மேடையாகவும், அவர்களின் முத்திரைச்சின்னமாக திகழும் புகைப்படங்களை உலகிற்கு காட்சிப்படுத்தும் ஒரு தளமாகவும் விளங்குகின்றதென்றால் அது மிகையாகாது.

இலங்கை இன்ஸ்டாகிராம் சமூகத்தினால் கைப்பற்றப்பட்ட இந்த கண்கவர் தருணங்கள், மக்கள் எவ்வாறு புகைப்படங்களாக தமக்கு கிடைத்த அனுபவங்களை கைப்பற்றிக்கொள்கின்றார்கள் என்பதையும், தம்மைச்சுற்றியுள்ள உலகத்தினை எவ்வாறு துல்லியமாக கண்டுணர்ந்து கொள்கின்றார்கள் என்பதையும் எடுத்தியம்புகின்றது. தற்போது உலகளாவிய ரீதியில் 800 மில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்களுடன், நாளாந்தம் அதிகரித்த பிரபல்யத்துடன், அங்கத்தவர் சேர்க்கையினை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் தளமாகது, ஒத்த கருத்துடைய நபர்கள் தமக்குள் இணைப்பினை ஏற்படுத்தி, தமது விருப்பத்திற்குரிய விடயங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற மிகச்சிறந்த தளமாக திகழ்கின்றது.

நாளொன்றினை எடுத்துக்கொண்டால், தினமும் 80 மில்லியனுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படுகின்றன. இதனால், எந்தவொரு இடத்திலும், ஏதாயினும் சம்பவம் நடைபெறுமிடத்து, அது உடனுக்குடன் படமாக கைப்பற்றப்பட்டு, இன்ஸ்டாகிராமில் பதியப்பட்டு, கலாசாரங்கள், மொழி என தடைகளை தகர்த்தெறிந்து உலகம் முழுவதும் செசன்றடைய வழிவகுக்கப்படுகின்றது என்பது நிதர்சனம்.