Back to Top

பனிஸ் தானசாலையுடன் வெசாக்கினை அனுஷ்டித்த செரன்டிப் மா ஆலை

பனிஸ் தானசாலையுடன் வெசாக்கினை அனுஷ்டித்த செரன்டிப் மா ஆலை

May 17, 2018  03:17 pm

Bookmark and Share
தொடர்ந்து மூன்றாவது வருடமாக நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கு அருகில் பனிஸ் தானசாலை ஒன்றினை ஒழுங்கு செய்து, வெசாக் அனுஸ்டானத்தில் செரன்டிப் மா ஆலையும் கலந்து கொண்டது. நாரஹேன்பிட்டி மியுர பேக்கரியுடனான பங்களிப்புடன் இந்த பனிஸ் தானசாலை ஒழுங்கு செய்யப்பட்டு, 15,000 பனிஸ்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. சுத்தமாக தயாரிக்கப்பட்ட பனிஸ்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விதத்தில் பொதியிடப்பட்டிருந்தன.

பௌத்த மதகுருவின் மத வழிபாட்டுடன் இந்த தானசாலை ஆரம்பிக்கப்பட்டு, பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்த்தது. செரன்டிப் மா ஆலையின் வெற்றிகரமான பத்து வருட நிறைவின் சமர்ப்பித்தலுடன் இணைந்ததாக இது இருந்தது. ´தேசத்தை வளர்த்தல்´ என்ற தொனிப்பொருளின் கீழ் செரன்டிப் மா ஆலையின் வருடாந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக, பிலியந்தலை தானசாலைக்கு 2,500 இறாத்தல் பாணும், மகியங்கனை தானசாலைக்கு 1,750 இறாத்தல் பாணும் பகிர்ந்தளிக்கப்பட்டன. எதிர்வரும் பொசன் போயா தினத்தின் போதும், இதேபோன்ற தானசாலை ஒன்றை நடத்துவதற்கு செரன்டிப் மா ஆலை திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த, செரன்டிப் மா ஆலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, மொஹமட் ரியால் அவர்கள், ´நிறுவனம் ஒன்று என்ற வகையில் ஊட்டச்சத்துடன் மற்றும் உயர் தரமான உற்பத்திகளின் மூலம் தேசத்தை வளர்ப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது நலனுக்கான சிறந்த விடயங்களை வழங்குவதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். வெசாக் போன்ற நிகழ்வுகள், தமது வாடிக்கையாளர்களின் நேர்மைக்கும், ஆதரவுக்கும் பிரதிபலிப்புக்கான ஒரு சந்தர்ப்பமாக உள்ளது. உள்ளூர் சமுதாயங்களுடன் நெருக்கமாக செயற்படும் செரன்டிப் மா ஆலை, பங்குதாரர்களுடன் இணைவதற்கான சிறந்த வழியாக தானசாலையினைப் பார்க்கின்றது. நிறுவனத்தின் பத்து வருட நிகழ்வினை கொண்டாடும் அதேவேளை, இந்த தானசாலைகளை நடத்துவதனையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்´ என்றார்.

நிறுவனத்தின் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து மிக்க தயாரிப்புக்கள், நிறுவனத்தின் உயர்தரமான பொருட்களில் நம்பிக்கை கொண்டுள்ள நேர்மையான வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.