Back to Top

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு! (படங்கள்)

May 18, 2018  09:59 am

Bookmark and Share
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) உணர்வுபூர்வமாக இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அந்த வகையில் இன்றைய தினம் நண்பகல் 1 2 மணி வரை வர்த்தகர்கள் கடைகளை அடைத்து துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு கோரப்பட்டதற்க்கு அமைவாக இன்று முல்லைத்தீவு மாவட்டம் எங்கும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, தண்ணீரூற்று, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)