Back to Top

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னாரிலும் அனுஷ்டிப்பு (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னாரிலும் அனுஷ்டிப்பு (படங்கள்)

May 18, 2018  12:20 pm

Bookmark and Share
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்ம சாந்திக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து அஞ்சலி உரைகளும்இடம் பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார் நகர சபையின் தலைவர், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூறும் வகையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள அதிகலவான வர்த்தக நிலையங்கள் காலை முதல் மதியம் வரை மூடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூர்ந்துள்ளனர்.

பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டதோடு, மக்களின் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டதா எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

(மன்னார் நிருபர் லெம்பட்)

Most Viewed