Back to Top

பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி (படங்கள்)

பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி (படங்கள்)

June 6, 2018  11:54 am

Bookmark and Share
நாவலப்பிட்டிய - கண்டி பிரதான வீதியில் தனியார் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நாலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டிய, பல்லேகல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஜயசேகர முதியான்செலாகே அமில என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றுடன், நாவலப்பிட்டிய பல்லேகல பகுதியில் இருந்து நாவலப்பிட்டியவை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (06) நாவலப்பிட்டிய கொந்தென்னாவ ரயில் கடவைக்கு அருகில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முந்திச் செல்ல பொருத்தமற்ற இடத்தில் லொறி ஒன்றை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் நாவலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மலையக நிருபர் இராமச்சந்திரன்)