Back to Top

சய்டத்தை நிரந்திரமாக மூடக்கோரி கிழக்குப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சய்டத்தை நிரந்திரமாக மூடக்கோரி கிழக்குப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

June 7, 2018  12:50 pm

Bookmark and Share
சய்டம் தனியார் மருத்துவ கல்லூரியை நிரந்திரமாக மூடிவிட வேண்டும் எனக் கோரி நேற்று (06) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)