Back to Top

மலசலகூட குழியில் வெடிபொருட்கள்

மலசலகூட குழியில் வெடிபொருட்கள்

June 7, 2018  04:37 pm

Bookmark and Share
புளியம்பொக்கணை சந்தியை அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரைச்சி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் பாவனையற்ற மலசலகூட குழி ஒன்றில் இவ்வாறு வெடிபொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மலசலகூட குழியில் மோட்டார் செல்கள், கைக்குண்டுகள் என பல்வேறு வகையான வெடிபொருட்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெடிபொருட்களை அகற்றவது மற்றும் செயலிழக்க செய்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வெடிபொருட்களை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)