Back to Top

மலையகத்தில் தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு

மலையகத்தில் தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு

June 8, 2018  09:59 am

Bookmark and Share
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, தியகல பகுதியில் நேற்று (07) மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.

எனினும் வீதி போக்குவரத்து அதிகார சபையினர் மண்சரிவை அகற்றும் பணியில் ஈடுப்பட்டதன் பின்னர் இன்று (08) காலை முதல் அவ்வீதியினூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் நேற்று (07) மாலை 4.30 முதல் தடைப்பட்டிருந்த ஹட்டன் - கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ச்சியாக இப்பிரதேசங்களிற்கு மழை பெய்து வருவதனால் தொடர்ந்தும் மண்சரிவு நிலவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தலவாக்கலை பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால் ஹொலிரூட் கிழக்கு தோட்ட பகுதியில் உள்ள ஆறு பெருக்கெடுத்தமையினால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 30 குடும்பங்கள் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் 24 பேர் பாதிக்கப்பட்டதுடன் வீட்டில் இருந்த பொருட்கள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்க ஹொலிரூட் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தோட்ட முகாமையாளர் தெரிவித்தார்.

(மலையக நிருபர்கள் கிரிஷாந்தன், புஷ்பராஜ்)

Most Viewed