Back to Top

 5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் சலீமுக்கு 7 ஆண்டு சிறை

5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் சலீமுக்கு 7 ஆண்டு சிறை

June 8, 2018  10:29 am

Bookmark and Share
டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் அசோக் குப்தா. கடந்த 2002 ஆம் ஆண்டு, பாதுகாப்பு தருவதாக கூறி இவரை மிரட்டி 5 கோடி பணம் பறிக்க முயன்றதாக பிரபல நிழல் உலக தாதா அபு சலீம் மீது டெல்லி நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அபு சலீம் குற்றவாளி என்று கடந்த மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நேற்று அரசு தரப்பு மற்றும் அபு சலீம் தரப்பிலான வக்கீல்களின் விவாதத்துக்கு பிறகு, அபு சலீமுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.