Back to Top

பங்களாதேஷை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்

பங்களாதேஷை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்

June 8, 2018  10:47 am

Bookmark and Share
பங்களாதேஷ் - ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடைபெறுகிறது.

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ரி 20 போட்டி இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அக்சார் ஸ்டானிக்சாய் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். ஷசாத் 26 ஓட்டங்களிலும்ம், கனி 19 ஓட்டங்களிலும், ஸ்டானிக்சாய் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

நபி 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். சத்ரான் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்தது. சமியுல்லா ஷென்வாரி அதிகபட்சமா 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பங்களாதேஷ் சார்பில் நஸ்முல் இஸ்லாம், அபு ஜயத் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 146 ஓட்டங்களை இலக்காக கொண்டு பங்களாதேஷ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாஸ், தமிம் இக்பால் இறங்கினர். தாஸ் 12 ஓட்டங்களிலும், தமிம் 5 ஓட்டங்களிலும், அடுத்து இறங்கிய சவுமியா சர்க்கார் 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய முஷ்பிகுர் ரகிம் ஓரளவு பொறுப்புடன் ஆடினார். இவர் இறுதி வரை போராடி 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து துடுப்பெடுத்தாடிய தலைவர் ஷகிப் அல் ஹசன் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து துடுப்பெடுத்தாடிய மகமதுல்லா இறுதி வரை போராடினார். பங்களாதேஷ் வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19 வது ஓவரில் முஷ்பிகுர் 21 ஓட்டங்கள் எடுத்தார். போட்டியின் கடைசி ஓவரில் வெற்றி பெற 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், ரஷித் கான் சிறப்பாக பந்து வீசினார்.

முதல் பந்தில் முஷ்பிகுர் ரகிமை ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில் மகமதுல்லா ஒரு ஓட்டம் எடுத்தார். மூன்றாவது பந்தில் 2 ஓட்டங்களும், நான்காவது பந்தில் ஒரு ஓட்டங்களும் ஐந்தாவது பந்தில் ஒரு ஓட்டங்களும் எடுத்தனர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. எதிர்பாராவிதமாக, விக்கெட் விழ, பரபரப்பான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இறுதியில், பங்களாதேஷ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, ஒரு ஓட்டத்தால் பரிதாபமாக தோற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில், முஜிப் உர் ரகுமான், கரிம் ஜனாத் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் 20 ஓவர் தொடரை முழுமையாக 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரகிம் மற்றும் தொடர் நாயகன் விருது ரஷித் கானுக்கும் வழங்கப்பட்டது.