Back to Top

பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு விளக்கமறியல்

பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு விளக்கமறியல்

June 8, 2018  01:45 pm

Bookmark and Share
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

ஶ்ரீஜயவர்தபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

சிலாபம் - புத்தளம் வீதியில் பங்கதெனிய, கொட்டபிட்டிய சந்திப் பிரதேசத்தில் கடந்த 06ம் திகதி அதிகாலை யசோத ரங்கே பண்டார பயணித்த கெப் வாகனம் வீடொன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதனால் நீர்ப்பாசன அமைச்சுக்கு சொந்தமான வாகனம் மற்றும் அந்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டிருந்தமை கூறத்தக்கது.