Back to Top

தொடர்ந்து 10 ஆவது நாளாக மனித எலும்புகள் அகழ்வு

தொடர்ந்து 10 ஆவது நாளாக மனித எலும்புகள் அகழ்வு

June 8, 2018  02:35 pm

Bookmark and Share
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று (08) 10 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று (08) காலை 7.30 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு அகழ்வு பணிகளுக்கு யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும், பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த அகழ்வு பணிகளின் போது மனித எலும்புகள், மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் 10 ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வு பணிகள் இன்று மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 7 மணிக்கு அகழ்வு பணிகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் லெம்பட்)